‘அப்படியொரு வாய்ப்பு தேவையில்லை’

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அனைத்துத் துறைகளிலும் இருக்கிறது என்றாலும் திரைத்துறையில் அதிகமாகவே உள்ளது என்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

தாம் ஒரு வாரிசு நடிகை என்று தெரிந்திருந்தும்கூட சிலர் படவாய்ப்புக்காக தம்மைப் படுக்கைக்கு அழைத்ததாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தயாரிப்பாளர்கள் இயக்குநர்களிடம் அனுசரித்துப் போகும்படி சிலர் என்னிடம் அறிவுரை கூறினர். ஆனால், அப்படியொரு வாய்ப்பு தேவையே இல்லை என்று எனக்கு ஆலோசனை சொன்னவர்களிடம் முகத்தில் அறைந்தாற்போல் கூறிவிட்டேன். அவ்வாறு என்னிடம் சிலர் பேசியது தொடர்பான ஆதாரங்களை வைத்துள்ளேன்,” என்று கூறியுள்ளார் வரலட்சுமி.

அவரது பேட்டி கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தாம் யாருக்கும் பயப்படவில்லை என்கிறார்.

“எல்லாம் நடந்து முடிந்தபிறகு பெண்கள் புகார் தெரிவிப்பதை ஏற்க இயலாது. பெண்கள் தங்களைப் பாதுகாத் துக்கொள்ள எந்நேரமும் தயாராக இருக்கவேண்டும்,” என்று வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!