‘வெயில் ஒரு கொடுப்பினை’

நடிப்பு, படத்தயாரிப்பு, இசை என மூன்று பணிகளிலும் கவனம் செலுத்தி வருவதாகச் சொல்கிறார் விஜய் ஆண்டனி.

தற்போது ‘தமிழரசன்’, ‘காக்கிச்சட்டை’, ‘அக்னி சிறகுகள்’ என ஒரே சமயத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார் இவர். தவிர, ஒருசில படங்களுக்கு இசையமைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் முதல்முறையாக படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பியுள்ளார்.

“எனது படத்தின் படப்பிடிப்புக்காக, முதன்முறை வெளிநாட்டுக்குச் சென்று வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தயாரித்த படங்களுக்காக கூட வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்தியதில்லை.

“ஆனால், இன்னொரு தயாரிப்பு நிறுவனம் என் மீதும் படக்குழு மீதும் நம்பிக்கை வைத்து ரஷ்யா, சுவிட்சர்லாந்து எனப் பல நாடுகளுக்கு அழைத்துச் சென்றதை நினைக்கும்போது மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுகிறது,” என்கிறார் விஜய் ஆண்டனி.

‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் காட்சிகளைத்தான் வெளிநாடுகளில் படமாக்கி உள்ளனர். ரஷ்யா, சுவிட்சர்லாந்து குறித்து பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்தாராம் விஜய் ஆண்டனி. ஆனால், அங்கு சென்ற பிறகுதான் வெளிநாட்டு வாழ்க்கை என்பது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்தாராம்.

“நாள் முழுவதும் பனியிலும் குளிரிலும் வாழ்வது சாதாரண விஷயமல்ல. அந்த வகையில் சென்னை வெயில் எல்லாம் நமக்கு மிகப்பெரிய கொடுப்பினை. தமிழ்நாட்டில் உள்ள பருவநிலைதான் நாம் வாழ்வதற்கு வசதியானது என்பதை சுவிட்சர்லாந்தில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்தேன்,” என்கிறார் விஜய் ஆண்டனி.

‘அக்னிச் சிறகுகள்’ திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்று குறிப்பிடுபவர், படத்தின் இயக்குநர் நவீன் தமக்கு நெருங்கிய நண்பராகிவிட்டதாகச் சொல்கிறார்.

இனி நடிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்துவீர்களா? என்று கேட்டால் நடிப்பு, தயாரிப்பு, இசை என மூன்று பணிகளை ஒருசேர கவனிப்பது சிரமமாக இருக்கிறது என்கிறார்.

“அதற்காக அந்த வேலைகளைக் கைவிட இயலாது. சிரமப்பட்டு சில விஷயங்களைச் செய்யவில்லை என்றால் ‘பிச்சைக்காரன்’, ‘நான்’ மாதிரியான படங்களை ரசிகர்களுக்குத் தந்திருக்க முடியாது.

“நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது ஒருவகை உழைப்பு. இதர பொறுப்புகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு பணியாற்றுவது இன்னொரு வகை உழைப்பு. இரண்டு வகைகளிலும் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். இனிமேல் இசையமைக்க வேண்டும், படம் தயாரிக்க வேண்டும் என்று தோன்றினால், உடனடியாக அதைச் செய்வேன்,” என்கிறார் விஜய் ஆண்டனி.

தற்போது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரண்டும் செயல்படாமல் இருப்பது கவலை தருவதாக குறிப்பிடுபவர், விரைவில் நிலைமை மாறும் என நம்புவதாகச் சொல்கிறார்.

“இரண்டு சங்கங்களிலும் இவர் உறுப்பினராக உள்ளார். இரு சங்கங்களுக்குமான எனது பங்களிப்பு என்றால், அது சங்கத் தேர்தலில் வாக்களிப்பதுதான்.

“தேர்தலின்போது ஏற்கெனவே பதவியில் இருப்பவர்கள் நல்லது செய்திருந்தால், அவர்களுக்கும், இல்லையெனில் எதிர்த்தரப்புக்கும் வாக்களிப்பேன். அத்துடன் என் வேலை முடிந்தது.

“சங்கத்தின் செயல்பாடுகளில் தலையிட மாட்டேன். அது வேறு மாதிரியான அரசியல் என்பதால் அதற்குள் நான் போக விரும்பவில்லை. இரு சங்கங்களும் தற்போது முடங்கியிருந்தாலும் படங்கள் வெளியாவதும் படப்பிடிப்புகளும் நீடித்து வருகின்றன என்பதும் நிம்மதியளிக்கிறது,” என்கிறார் விஜய் ஆண்டனி.

இந்த ஆண்டு இவரது நடிப்பில் உருவாகியுள்ள மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன.

மூன்றுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளதால் வசூலும் திருப்திகரமாக இருக்கும் என கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“திரையுலகில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அனைவருக்கும் லாபம் கிடைக்கும்,” என்று அக்கறையுடன் சொல்கிறார் விஜய் ஆண்டனி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!