‘சென்னை-600 028’ படத்­தின் மூன்­றா­வது பாகத்தை எடுக்க இயக்­கு­நர் வெங்­கட் பிரபு முடிவு

‘சென்னை-600 028’ படத்­தின் மூன்­றா­வது பாகத்தை எடுக்க இயக்­கு­நர் வெங்­கட் பிரபு முடிவு செய்­துள்­ளார். இதற்­கான பணி­கள் சத்­த­மின்றி நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் இதன் முதல் பாகம் கொடுத்த அனு­ப­வங்­களை அண்­மை­யில் பகிர்ந்து கொண்­டுள்­ளார் வெங்­கட் பிரபு.

ஜெய், சிவா, பிரேம்ஜி, அர­விந்த் ஆகாஷ், நிதின் சத்யா, சம்­பத்­ராஜ், இள­வ­ரசு, விஜ­ய­லட்­சுமி என பெரிய நட்­சத்­திர பட்­டா­ளமே இந்­தப் படத்­தில் நடித்­தது.

இப்­ப­டம் வெளி­யாகி 13 ஆண்­டு­கள் கடந்­துள்­ளன. படத்­தின் விநி­யோக உரி­மையை விற்க முத­லில் சிர­மப்­பட்­ட­ன­ராம்.

பொறுப்பே இல்­லா­மல் எடுக்­கப்­பட்ட படம் என்று பெரிய நிறு­வ­னங்­கள் விமர்­சித்­த­ன­வாம். இத­னால் படக்­குழு தடு­மாறி நின்­றது. இதை­ய­டுத்து தயா­ரிப்­பா­ளர் எஸ்.பி.பி. சரண் ஒவ்­வொரு பகு­திக்­கு­மான வெளி­யீட்டு உரி­மை­யைப் பிரித்து பிரித்து விற்­றுள்­ளார்.

“பெரிய கதா­நா­ய­கன் இல்லை, வழக்­க­மான கதை­யல்ல, ரசி­கர்­க­ளுக்­குப் பிடிக்­குமா பிடிக்­காதா என்ற சந்­தே­கம். இவை எல்­லாம் இருந்­தும் சில விநி­யோ­கஸ்­தர்­கள் நம்­பிக்­கை­யு­டன் வட்­டார வெளி­யீட்டு உரி­மை­யைப் பெற்­ற­னர்.

“படம் வெற்றி அடைந்­த­வு­டன் முன்பு கடு­மை­யாக விமர்­சித்த பெரிய நிறு­வ­னங்­களே மீண்­டும் அணு­கின.

“ஆனால், ‘நம்­பிக்­கை­யு­டன் இப்­ப­டத்தை வெளி­யிட்டு விட்­டோம். இனி என்ன நடந்­தா­லும் அது நமக்கே இருக்­கட்­டும்’ என்று சரண் சொல்­லி­விட்­டார்,” என்­கி­றார் வெங்­கட் பிரபு.

தனது தந்தை கங்கை அம­ர­னுக்கு ‘கர­காட்­டக்­கா­ரன்’ என்­றால், தனக்கு தனி அங்­கீ­கா­ரத்­தைப் பெற்­றுத் தந்­தது ‘சென்னை-600 028’ என்று குறிப்­பி­டு­ப­வர், யாரி­ட­மும் உதவி இயக்­கு­ந­ராக பணி­பு­ரி­யாத கார­ணத்­தால் திரைத்­து­றை­யில் தனது அணு­கு­முறை சற்று வித்­தி­யா­ச­மா­ன­தாக இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

‘சென்னை-600 028’ படத்தை திரை­ய­ரங்­கம் ஒன்­றில் ரசி­கர்­க­ளோடு பார்த்­தா­ராம் விஜய். பிறகு தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு நீண்ட நேரம் பாராட்­டி­னா­ராம். அதே­போல் சிறப்­புக் காட்­சி­யைப் பார்த்து அஜித்­தும் பாராட்டி உள்­ளார்.

கே. பால­சந்­தர், பார­தி­ராஜா இரு­வ­ரும் படத்­தைப் பாராட்டி எழு­திய கடி­தத்தை பொக்­கி­ஷம் போல் இன்­ற­ள­வும் பாது­காத்து வரு­வ­தா­கச் சொல்­கி­றார் வெங்­கட் பிரபு.

“ரஜினி படத்­தின் சிறப்­புக் காட்­சி­யைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­த ­போது இறு­திக் காட்சி வந்­த­தும் பதற்­ற­மாகி விட்­டார். படம் முடிந்­த­தும் சிறு கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­த­வர்­கள் வரை அனை­வ­ரை­யும் குறிப்­பிட்­டுப் பாராட்­டி­னார்.

“இந்­தி­யில் வெற்றி பெற்ற ‘லகான்’ திரைப்­ப­டத்­தின் தமிழ் பதிப்பை ரஜி­னியை வைத்­துப் பட­மாக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். ஆனால், அவர் அப்­ப­டத்­தைப் பார்த்­து­விட்டு தமி­ழில் மறு­ப­திப்பு செய்ய மிகத் திற­மை­யான இயக்­கு­நர் வேண்­டும் என்று கூறி நடிக்க மறுத்­தா­ராம்.

“சென்னை-600 028 படத்­தைப் பார்த்­த­வு­டன் அந்த ‘லகான்’ தமிழ் மறு­ப­திப்பை வெங்­கட் பிரபு இயக்கி இ­ருக்­க­லாம் என்று நினைத்­தேன் என்று குறிப்­பிட்­டார்.

“இதை­வி­டப் பெரு­மை­யான விஷ­யம் வாழ்க்கையில் வேறு என்ன இருக்கமுடியும், சொல்­லுங்­கள்,” என்­கி­றார் வெங்­கட் பிரபு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!