கொரோனா முடிவுக்கு வந்த பிறகே தனுஷ் படம் வெளியீடு

கொரோனா கிருமித் தொற்று விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே ‘ஜகமே தந்திரம்’ பட வெளியீடு குறித்து முடிவு செய்ய இயலும் என அதன் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தில் அவரது ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இதன் முக்கியமான காட்சிகளை லண்டனில் படமாக்கி உள்ளனர். உழைப்பாளர் தினத்தை ஒட்டி மே 1ஆம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கொரோனா கிருமித் தொற்று விவகாரம் ஏற்படுத்திய சிக்கலால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில் இந்தப் படமும் இணையத்தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக சிலர் கதைகட்டிவிட்டனர்.

ஆனால் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புதிய சுவரொட்டியை படக்குழுவினர் வெளியிட்டு இத்தகவல் பொய் என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

அந்தச் சுவரொட்டியில், “ஜகம் (உலகம்) சுகமடைந்த பிறகு படம் திரைக்கு வரும்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சுவரொட்டி தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிரேவ் ஹார்ட், டிராய், நார்னியா, கேம் ஆப் த்ரோன்ஸ் என பல படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் இவர்.

இந்நிலையில், தனுஷ் மிகச் சிறந்த நடிகர் என்றும் அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் கூறியுள்ளார் ஜேம்ஸ் காஸ்மோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!