கீர்த்தி சுரேஷ் படத்துக்கு திடீர் சிக்கல்

கோடம்பாக்கத்தில் ஒரு படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்குள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் மலைக்க வைக்கின்றன. படத்தை எடுத்து முடித்ததும் அதைச் சிக்கலின்றி வெளியிடுவதும் இமாலய சாதனைதான்.

அதுமட்டுமல்ல, ஒரு படத்துக்கான வேலைகளைத் துவங்கும் முன்பே கூட சிக்கல் எழும். அந்த வகையில் புதுப்படங்கள் குறித்த சில தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படம் குறித்து ஒவ்வொரு நாளும் விதவிதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இப்படம் இணையம் வழி நேரடியாக வெளியாகும் என்று கூறப்பட்டது.

இத்தகவலை இப்படக்குழுவினர் முன்பே மறுத்து விட்டனர். எனினும் நேற்று முன்தினம் இத்தகவல் மீண்டும் பரவியது. தனியார் நிறுவனம் ஒன்று படத்தயாரிப்புத் தரப்பிடம் பெருந்தொகையை அளிக்க முன்வந்ததாகவும் தயாரிப்பாளர் நலன் கருதி இந்த ஏற்பாட்டுக்கு விஜய் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித்குமார், ‘மாஸ்டர்’ திரையங்குகளில்தான் வெளியிடப்படும் என மீண்டும் உறுதி செய்துள்ளார்.

“விஜய் படம் இணையத்தளத்தில் வெளியாகாது. ஏற்கெனவே திரையுலகம் முடங்கியுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள். ‘மாஸ்டர்’ படத்தில் எங்களுக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும்.

“எத்தனைப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் திரையரங்குகளில் மட்டுமே படத்தை வெளியிடுவது என்ற முடிவில் உறுதியாக இருப்போம்” என்று லலித்குமார் தெளிவுபடுத்தி உள்ளார்.

இதற்கிடையே எதிர்பாராதவிதமாக நடைமுறைச் சிக்கல்களால் தயாரிப்பாளருக்கு லாபம் குறைந்தாலோ, நஷ்டம் ஏற்பட்டாலோ அதுகுறித்துக் கவலைப்பட வேண்டாம் என்றும் விஜய் கைகொடுப்பார் என்றும் அவரது தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகக் கூறப்படும் புதுப்படம் ஒன்றுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 44 படங்களை இயக்கியும் உள்ளார் விஜய நிர்மலா. இதன் காரணமாக அவரது பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் விஜய நிர்மலாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நரேஷ் திடீரென இப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தனது தாயாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க தம்மிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் இதுவரை இது தொடர்பாக தாம் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“சில ஆண்டுகளுக்கு முன் தாயாரின் வாழ்க்கையைப் படமாக்க நான் திரைக்கதை எழுதினேன். இப்பணியில் எனது தாயாரும் உதவினார். ஆனால் அவர் காலமான பிறகு அந்தப் பணிகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். எனினும் மிக விரைவில் அந்தப் பணியை முடிப்பேன்,” என்கிறார் நரேஷ்.

இதனால் கீர்த்தி தரப்பு கவலை அடைந்துள்ளதாம். உரிய அனுமதி பெற்று சிக்கலின்றி படம் எடுக்கப்பட்டால் அதில் நடிக்கத் தயார் என்றும் யாருடைய மனமும் வருத்தப்படக்கூடாது என்றும் அவர் கூறியிருப்பதாகத் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!