66 அழகிகளை நிராகரித்த படக்குழு

அதர்வா நடிக்கும் தலைப்பிடப்படாத புதுப்படத்துக்கான நாயகியைத் தேர்வு செய்ய பல மாதங்களாகிவிட்டதாக படத்தின் இயக்குநர் ரவீந்திர மாதவா தெரிவித்துள்ளார்.

இவர் பூபதி பாண்டியன், சுசீந்திரன் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

“எனது படத்துக்கு அதர்வாதான் நூற்றுக்கு நூறு பொருத்தமான கதாநாயகன். ஆனால் கதையின் நாயகி அழகு, மென்மை, நடிப்புத்திறன் ஆகிய மூன்றின் கலவையாக இருக்கவேண்டும். திரையில் சும்மா வந்து போகிறவராக இல்லாமல், வில்லனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கதாபாத்திரம் இது.

“இப்படிப்பட்ட ஒருவருக்காக தேடுதல் வேட்டை நடத்தினோம். 66 அழகிகளைப் பார்த்து கடைசியாக லாவண்யா திரிபாதியைத் தேர்வு செய்தோம். இவர் தனது அழகாலும் நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை நிச்சயம் கவர்வார்,” என்கிறார் இயக்குநர் ரவீந்திர மாதவா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!