நான் காதலிக்கவில்லை: தமன்னா விளக்கம்

நடிகைகள் காதலிப்பதாக தகவல் வெளியாவது ஒன்றும் புதிதல்ல. இத்தகைய தகவல்களில் சில உறுதியாகும் எனில் சில தகவல்கள் பொய்யாகிப் போகும்.

எந்த நடிகை பற்றி இவ்வாறு தகவல்கள் வெளியாகிறது என்பதைப் பொறுத்து பரபரப்பின் அளவு மாறும்.

தற்போது தமன்னா காதல் வயப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரைக் காதலிப்பதாகவும் மிக விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்துதான் தமிழ் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசி வருகிறார்கள்.

தற்போது தெலுங்கில் உருவாகும் ‘சீட்டிமார்’ படத்தில் கபடிப் பயிற்சியாளராகவும் தமிழில் இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார் தமன்னா. ஊரடங்கு வேளையில் தம்மால் முடிந்த உதவிகளை ஆதரவற்றவர்களுக்குச் செய்து வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை இவர் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வருவதாகவும் துபாயில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது என்றும் ஒரு தகவல் வெளியானது.

இருவரும் இணைந்திருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகவே இந்தச் செய்தி உண்மைதான் என்று ரசிகர்கள் முடிவுக்கு வந்தனர். இந்நிலையில் தாம் யாரையும் காதலிக்கவில்லை என்று தமன்னா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது வெறும் வதந்தி. சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் தமன்னா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அந்த நிகழ்வுக்கு கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கும் வந்திருந்தார்.

“அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருவரும் அருகருகே நின்றிருந்தனர். இதை வைத்து இருவரும் காதலிப்பதாக சிலர் கதைகட்டி விட்டனர். தற்போது திரைப்படங்களில் பணியாற்றுவதில் மட்டுமே தமன்னா கவனம் செலுத்தி வருகிறார் என்று அவரது தரப்பு விளக்கமளித்துள்ளது.

இது ஒரு நடிகையின் திருமணம் குறித்த ஒரு தகவல் எனில், இன்னொரு நடிகையின் விவாகரத்து குறித்தும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை மேக்னா வின்சென்ட் தனது காதல் கணவரை விவாகரத்து செய்துள்ளார். இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ‘கயல்’ படத்தில் நடித்தவர். மேலும் ‘தெய்வம் தந்த வீடு’, ‘பொன்மகள் வந்தாள்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவரது திருமணம் 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. தனது காதலர் டான் டோமி என்பவரை மணந்தார். எனினும் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

கடந்த சில மாதங்களாக தனியாக வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார் மேக்னா. தற்போது விவாகரத்து கிடைத்துள்ள நிலையில் டாம் டோமி இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!