‘இத்தோடு முடிந்துவிடாது’

தொடக்­கத்­தில் ஊர­டங்கை மகிழ்ச்­சி­யு­டன் வர­வேற்ற இளம்­நா­யகி பூஜா ஹெக்டே தற்­போது தாம் கவ­லை­யில் மூழ்கி இருப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

தொடர்ந்து படப்­பி­டிப்பு உள்­ளிட்ட எந்­தப் பணி­யி­லும் ஈடு­ப­டா­மல் சும்மா இருப்­பது ஒரு­வித சலிப்­பை­யும் கவ­லை­யை­யும் ஏற்­ப­டுத்­து­வ­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மற்ற நடி­கை­க­ளைப் போலவே பூஜா­வும் சமூக வலைத்­த­ளங்­களில் இயங்­கு­கி­றார். எனி­னும் அதி­க­மான பதி­வு­களை அவ­ரி­டம் எதிர்­பார்க்க முடி­யாது.

அவ்­வப்­போது ஒன்­றி­ரண்டை எதிர்­பார்க்­க­லாம். இந்­நி­லை­யில் யோகா­ச­னம் செய்­யும் காணொ­ளிப் பதிவு ஒன்றை அவர் வெளி­யிட்­டுள்­ளார்.

உடற்­ப­யிற்சி செய்­வ­தன் அவ­சி­யம் குறித்­துப் பதி­வி­ட­லாமே என்­றும் அதன்­மூ­லம் ரசி­கர்­க­ளுக்கு உடல்­ந­லத்­தைப் பேணு­வது குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்­த­லாமே என்­றும் பல­ரும் கேட்­கி­றார்­கள்.

ஆனால் அதில் தமக்கு விருப்­பம் இல்லை என்­கி­றார்.

“நான் தின­மும் உடற்­பயிற்சி செய்­கி­றேன். அதற்­காக அது­கு­றித்து பிற­ருக்கு எடுத்­துக்­கூறும் அள­வுக்கு நான் நிபு­ணத்­து­வம் பெற்­றி­ருப்­ப­தா­கக் கரு­த­வில்லை.

“என­வே­தான் உடற்­ப­யிற்சி செய்­வது போன்றோ, அது­தொ­டர்­பாக பேசியோ காணொ­ளிப் பதிவு எதை­யும் நான் இது­வரை வெளி­யி­ட­வில்லை.

“தவிர இன்று சமூக வலைத்­த­ளங்­களில் உடற்­ப­யிற்சி தொடர்­பாக ஏரா­ள­மான காணொ­ளிப் பதி­வு­கள் உள்­ளன. இதில் நான் வேறு எதற்­காக அப்­ப­டி­யொரு பதிவை வெளி­யிட்டு எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க வேண்­டும்.

“எனக்கு அதில் அறவே விருப்­ப­மில்லை. அதே­ச­ம­யம் யோகாவை அனை­வ­ரும் கற்­க வேண்டும் என விரும்புகிறேன். அத­னால் அந்­தக் காணொ­ளியை வெளி­யிட்­டேன்,” என்­கி­றார் பூஜா ஹெக்டே.

எப்­போ­தும் ஏதே­னும் ஒரு வேலை­யைச் செய்து கொண்­டி­ருப்­ப­து­தான் இவ­ரது வழக்­க­மாம். தற்­போது ஊர­டங்கு உத்­த­ர­வால் அவ்­வாறு இருக்க முடி­ய­வில்­லை­யாம்.

“என்­னால் வேலை செய்­யா­மல் இருக்க முடி­யாது. தொடர்ந்து பய­ணங்­கள் மேற்­கொள்­வது, படப்­பி­டிப்­பு­களில் பங்­கேற்­பது, திரைத்­துறை சார்ந்த மற்ற பணி­களில் ஈடு­ப­டு­வது என்று இருந்­து­விட்­டேன். இப்­போது அவற்­றைச் செய்ய முடி­யா­த­தால் எதையோ இழந்­தது போல் இருக்­கிறது.

“இது­கு­றித்து யோசிக்­கும்­போது கவலை அதி­க­ரிப்­ப­து­டன் ஒவ்­வொரு நாளை­யும் வீண­டிப்­பது போன்ற உணர்­வும் ஏற்­ப­டு­கிறது. ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­ட­போது நானும்­கூட நீண்ட ஓய்வு கிடைத்­தி­ருக்­கி­றதே என உற்­சா­கம் அடைந்­தேன். ஆனால் இப்­போது அந்த உற்­சா­கம் எங்கே போனது என்று தெரி­ய­வில்லை,” என்­கி­றார் பூஜா.

கொரோனா கிரு­மித்தொற்­றின் தாக்­கம் எப்­போது முடி­வுக்கு வரும் என்­ப­தைக் கணிக்க முடி­ய­வில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், முடிவு தெரி­யாத விடு­மு­றைக் கால­மும் தம்மை ஆட்­டிப்­ப­டைப்­ப­தா­கச் சொல்­கி­றார். இந்­தாண்­டின் துவக்­கமே பூஜா­வுக்கு அமர்க்­க­ள­மாக அமைந்­தது. சில புதுப்­ப­டங்­களில் அடுத்­த­டுத்து ஒப்­பந்­த­மா­னார்.

‘பாகு­பலி’ பிர­பாஸ், இந்­தி­யில் சல்­மான்­கான் என்று பெரிய நாய­கர்­க­ளு­டன் ஜோடி சேர்ந்த வகை­யில் முன்­னணி நடி­கை­யாக உரு­வெ­டுத்து வரு­கி­றார்.

“கொரோனா கிருமி நம் வாழ்க்­கை­யில் குறுக்­கி­டா­மல் இருந்­தி­ருந்­தால் மேலும் பல நல்ல அறி­விப்­பு­களை வெளி­யிட்­டி­ருப்­பேன். சில பிர­மாண்ட படைப்­பு­களில் நானும் இணைந்­துள்­ளேன். ஆனால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அந்­தப் படங்­கள் குறித்து இப்­போது ஏதும் அறி­விக்க இய­லாது.

“எனி­னும் வாழ்க்கை இத்­தோடு முடிந்­து­வி­டப் போவ­தில்லை. இந்த இக்­கட்­டான சூழல் முடி­வுக்கு வந்­த­பி­றகு நான் குறிப்­பி­டும் அந்த அறி­விப்­பு­கள் அடுத்­த­டுத்து வெளி­யா­கும்,” என்று கண்­களில் மின்­னும் நம்­பிக்­கை­யு­டன் சொல்­கி­றார் பூஜா.

இதற்­கி­டையே இந்­தி­யில் கவர்ச்சி நாய­கி­யாக நடிக்க இவர் மூன்று கோடி ரூபாய் சம்­ப­ளம் கேட்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது. பாலி­வுட்­டில் தயா­ரா­கும் அந்­தப் படத்­தில் படுக்­கை­ய­றைக் காட்­சி­களும் உள்­ள­ன­வாம். கதை­யைக் கேட்ட பூஜா, நெருக்­க­மான காட்­சி­களில் நடிக்க வேண்­டும் என்­றால் தாம் கேட்­கும் தொகை­யைச் சம்­ப­ள­மா­கத் தர வேண்­டும் என்று நிபந்­தனை விதித்­த­தா­கத் தக­வல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!