‘கவர்ச்சி எனக்கு ஒத்து வராது’

எத்தகைய சூழ்நிலையிலும் தம்மால் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடிக்க இயலாது என்கிறார் இளம் நாயகி பிரியா பவானி சங்கர்.

கவர்ச்சி காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட வாய்ப்பை உதறித்தள்ள தயங்கப்போவதில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து சாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் பிரியா பவானி சங்கருக்கு நிச்சயம் இடம் உண்டு.

‘மேயாத மான்’, ‘மான்ஸ்டர்’, ‘மாஃபியா’ ஆகிய படங்களை அடுத்து ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் பிரியா. மேலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுதவிர மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக ‘பொம்மை’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவரைத் தொடர்புகொண்டு பேசும் புது இயக்குநர்கள் பலரும் கவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்குமாறு கேட்டு நச்சரிக்கிறார்களாம். ஆனால், எத்தகைய சூழ்நிலையிலும் தம்மால் அதற்கு உடன்பட இயலாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் பிரியா.

“தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் கவர்ச்சியாக நடித்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இல்லையென்றால் வெகு விரைவில் மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்றும் கூறுகின்றனர். அவர்களுக்கெல்லாம் என்னுடைய ஒரே பதில் என்னால் கவர்ச்சியாக நடிக்க இயலாது, முடியாது என்பதுதான்.

“என் முகத்துக்கும் உடற்கட்டுக்கும் கவர்ச்சிகரமான வேடங்கள் அறவே ஒத்துவராது. எனவேதான் இந்த விஷயத்தில் நான் முன்பே தெளிவாக முடிவெடுத்து விட்டேன்.

“சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் கவர்ச்சியாக நடிக்கக் கேட்டு வாய்ப்புகள் தேடிவந்தன. ஆனால் பெரிய நிறுவனமோ, சிறிய நிறுவனமோ கவர்ச்சிப் பாதைக்கு செல்ல மாட்டேன்,” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் பிரியா.

தமிழ் சினிமாவில் கவர்ச்சியை நம்பி காலம்தள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிடும் பிரியா, உலகத் தரம் வாய்ந்த படங்கள் உருவாகும் கோடம்பாக்கத்தில் திறமைக்கு நிச்சயம் மதிப்புண்டு என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!