டாப்சி: காதல் வயப்பட்டுள்ளேன்

நடிகை டாப்சி தாம் காதல் வயப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும் தனது காதலர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ்ச்சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி. அதன்பிறகு தமிழ், தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையானார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘பிங்க்’ இந்தித் திரைப்படம் இவரை நாடு முழுவதும் பிரபலமாக்கியது. அண்மையில் இவரது நடிப்பில் உருவான ‘தப்பட்’ இந்திப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தபோது டாப்சியும் ‘பிக்பாஸ்’ புகழ் நடிகர் மகத்தும் காதலிப்பதாக ஒரு தகவல் வெளியானது.

படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க டாப்சி மும்பையில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் அவரை விமான நிலையத்தில் வரவேற்பது, நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்துச் செல்வது எல்லாமே மகத் பொறுப்புதான்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகன் மனோஜும் டாப்சிக்கு நெருக்கமான நண்பராக அறியப்பட்டார். ஒருமுறை டாப்சியுடனான நட்பு தொடர்பாக மகத்துக்கும் மனோஜுக்கும் இடையே அடிதடி நடந்ததாகவும்கூட தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்திப் படங்களில் கவனம் செலுத்திய டாப்சி அதன்பிறகு சென்னை பக்கமே தலைகாட்டவில்லை. இந்நிலையில் அவருக்கும் டென்மார்க்கைச் சேர்ந்த மத்தியாஸ் போ என்ற பேட்மிட்டன் வீரருக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், டாப்சி இதுகுறித்து ஏதும் பேசவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற சில போட்டிகளில் பங்கேற்க வந்தார் மத்தியாஸ் போ. அந்தப் போட்டிகளுக்கான சிறப்பு விருந்தினராக டாப்சி இருந்தார்.

மேலும் டெல்லியில் நடைபெற்ற ஒரு காட்சிப் போட்டியில் மத்தியாஸுடன் அவரும் விளையாடினார். அப்போது முதல் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக இந்தி ஊடகங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் நீண்ட மௌனத்துக்குப் பிறகு தனது காதலை உறுதி செய்துள்ளார் டாப்சி. தாம் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை என்று அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் வாழ்க்கையில் ஒரு நபரின் இருப்பை ஏற்றுக் கொள்வதில் தமக்குப் பெருமைதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார் என்பது என் குடும்பத்துக்கும் தெரியும். என் சகோதரிகள், பெற்றோர் என அனைவருக்கும் நான் யாருடன் இருக்கிறேனோ அவரைப் பிடிக்க வேண்டும். இது எனக்கு மிகவும் முக்கியம். இல்லையென்றால் என்னால் அந்த உறவில் இருக்க முடியாது. ‘என் அம்மா, அப்பா மறுத்தால் இது நடக்காது’ என முன்பே நகைச்சுவையாக சொல்லி இருக்கிறேன்.

“பொதுவாக நான் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க விரும்ப மாட்டேன். அதே நேரத்தில் தலைப்புச் செய்தியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக பேச மாட்டேன்.

“ஏனென்றால் அது நம்பகத்தன்மையை, இவ்வளவு நாள் நான் கடுமையாக உழைத்துச் சேர்த்த நற்பெயரைக் கெடுத்துவிடும்,” என்று தெரிவித்துள்ளார் டாப்சி.

டாப்சியின் திருமணம் குறித்து பேசியுள்ள அவரது தாயார், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தன் மகளை நிர்பந்திக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“என் மகளுக்கு எனது தரப்பில் இருந்து எந்தவித அழுத்தமும் இல்லை.

“திருமணம் குறித்து நான் சில சமயங்களில் பேசுவேன். ஆனால் எனக்கும் கூட திருமணம் என்ற அமைப்பில் அதிக நம்பிக்கை இல்லை.

“என் மகள் எதைச் செய்தாலும் கச்சிதமாகச் செய்வாள் என நம்புகிறேன். என் மகள் தனது எதிர்காலம் தொடர்பாக எடுத்திருக்கும் முடிவு சரியானது. நாங்கள் அவளை ஆதரிப்போம்,” என்றும் டாப்சியின் தாய்க்குலம் கூறியுள்ளார்.

இந்திய நடிகைகள் வெளிநாட்டு காதலர்களை கைப்பிடித்து மணந்து வருகிறார்கள்.

லண்டன் மருமகளான ராதிகா ஆப்தே முதல் அண்மையில் ஸ்பெயின் நாட்டு மருமகளாகி இருக்கும் ஸ்ரேயா வரை திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறார்கள். அப்பட்டியலில் இணைந்து மேல்நாட்டு மருமகள் ஆகிறார் டாப்சி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!