தாதியரை வாழ்த்திய திரை நட்சத்திரங்கள்

தாதியர் தின வாழ்த்துகளை திரைநட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

கொரோனா கிருமியின் கோரப்பிடியில் ஒட்டுமொத்த உலகமும் சிக்கியுள்ள நிலையில் தாதியரின் சேவை அளப்பரியது என்று அனைவரும் பாராட்டி உள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று பல தாதியரின் கைபேசி எண்களைச் சேகரித்து நடிகர் மோகன்லாலிடம் அளித்தது. இதையடுத்து அவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேசினார் மோகன்லால்.

அப்போது தாதியரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் சமுதாயத்துக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டினார் மோகன்லால்.

அவரது இந்த திடீர் அழைப்பும் அனுசரணையான வார்த்தைகளும் தாதியருக்கு இன்ப அதிர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் தாதி பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் தன்னிகரற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ரெமோ’ படத்தில் தன் காதல் கைகூடவேண்டும் என்பதற்காக தாதி வேடமிட்டு வலம் வருவார் சிவா. அந்தக் கதாபாத்திரம் ஜாலியாக சித்திரிக்கப்பட்டிருந்தாலும் தாதியரின் கடமைகளிலிருந்து அவர் விலகிச் செல்ல மாட்டார்.

அப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தாதியரின் அருமையை, முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இருக்கும்.

இந்நிலையில் தனது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில், “தன்னிகரில்லா சேவை புரியும் அனைத்துத் தாதியருக்கும் எனது நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார் சிவா.

தாதியரின் நேர்மையான சேவைக்கு நன்றி என்று நடிகை ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.

“இந்தச் சவாலான நேரத்தில் உங்களது தன்னலமற்ற உழைப்புக்கும் மக்களின் பாதுகாப்புக்காக நீங்கள் செய்யும் தியாகங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். நீங்கள் பெரிய மரியாதைக்கு தகுதியானவர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மாறுவேடத்தில் இருக்கும் தேவதைகள்,” என்று ஷ்ரத்தா கபூர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்றைய தேதியில் உண்மையான கதாநாயகர்கள் என்றால் அது மருத்துவர்களும் தாதியர்களும்தான் என்கிறார் நடிகை அதிதி ராவ்.

‘எங்கள் கதாநாயகர்கள்’ என நடிகை யாமி கௌதமும் ‘நாயகர்களுக்கு நன்றி’ என்று அபிஷேக் பச்சனும் ‘தாதியர் குலத்தின் சேவைக்கு நன்றி’ என நடிகை பிரியங்கா சோப்ராவும் தெரிவித்துள்ளனர்.

தாதியர் ஒவ்வொருவரையும் மனதில் நன்றியுடன் நினைத்து தலைவணங்குவதாக பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் கூறியுள்ளார்.

சில சமயங்களில் மருத்துவர்களைவிட தாதியர் முக்கியமானவர்கள் என்று நடிகர் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தாதியருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள் என்று சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனது ‘பார்த்திபன் மனிதநேய மன்றம்’ சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய ஒரு பெரியவர் எனது சேவைகளை அங்கீகரித்து 50 முனைவர் பட்டம் கொடுக்கலாம் என்றார்.

“அதற்குப் பதிலளிக்கும்போது முனைவர் பட்டத்துக்குப் பதிலாக 25 மருத்துவர்களையும் 25 தாதியரையும் தாருங்கள் என்றேன். காரணம் செவிலித்தாய்களால் வளர்க்கப்பட்ட பல பிள்ளைகள் உண்டு. பலர் இதைப் பெருமையாக சொல்லக் கேட்டிருக்கிறேன். அனைவரும் தாதியரைப் போற்ற வேண்டும்,” என்று பார்த்திபன் மேலும் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!