தீவிரவாதியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம்

உலகமே முடங்கியுள்ள நிலையில் திரைக்கலைஞர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி பொழுதுபோக்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்காக உள்ளது.

அதற்கேற்ப திரையுலகத்தினரும் சுவாரசியமான தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். நடிகை சாய்பல்லவி தற்போது நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இயல்பாக நடிக்கக்கூடியவர் என்று பெயரெடுத்துள்ளார் சாய்பல்லவி. இந்நிலையில் இவர் ‘விரதபர்வம் 1992’ என்ற புதுப்படத்தில் நக்சலைட் தீவிரவாதியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதில் ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். கதைப்படி நாட்டுப்புறப் பாடகியாக இருக்கும் சாய்பல்லவி பின்னர் நக்லசைட் இயக்கத்தில் சேர்வதாக கதை நகருமாம்.

வேணு உடுகுலா இயக்கும் இந்தப் படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம்.

இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நக்சலைட் வேடத்தில் நடிக்க சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் சாய்பல்லவி.

நக்சலைட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட முன்னாள் உறுப்பினரான ஒரு பெண்ணை அண்மையில் சந்தித்தாராம் இயக்குநர் வேணு. இதையடுத்து அவர் தனது அனுபவங்களை சாய் பல்லவியிடம் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளாராம்.

சில உண்மைச் சம்பவங்களை அந்த முன்னாள் நக்சலைட் உறுப்பினரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தன் நடிப்பை மெருகேற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளார் சாய்பல்லவி.

இளம் நாயகி நிதி அகர்வால் தமிழ் கற்று வருகிறார். இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இவர், தற்போது தெலுங்கு, தமிழ்ப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மாடலிங் செய்வதிலும் நடனமாடுவதிலும் அசத்தக்கூடிய நிதி அகர்வால், தமிழில் பூமி படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழில் தனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறாராம். எனவே தமிழில் பேசக் கற்றுக்கொண்டால்தான் நல்லது என நெருக்கமான சிலர் இவருக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

இதையடுத்து தமிழ் கற்று வருவதாக தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் நிதி. மேலும் தாம் தமிழ் கற்றுக்கொள்ளும் விதம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை ஒரு பட்டியல் போல் எழுதி வைத்து மனப்பாடம் செய்து வருகிறாராம். மிக விரைவில் தம்மால் தமிழில் பேசமுடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நிதி.

ஊரடங்கு வேளையில் பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் நல்ல பிள்ளையாக அசத்துகிறார் சிம்பு. வேறொன்றுமில்லை, தினமும் விதவிதமாக சமைத்து தன் பெற்றோருக்கும் தம்பிக்கும் பரிமாறுகிறாராம்.

நடிகர்களில் அஜித் பிரியாணி சமைப்பதில் கெட்டிக்காரர். அவரை ‘நளமகராஜா’ என்றே நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள். நடிகர்கள் ஆர்யா, விஷால், சூரி ஆகியோரும் சமையலில் கெட்டிக்காரர்கள். இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறார் சிம்பு.

இப்போது ஓய்வு கிடைத்திருப்பதால் பெற்றோர் டி.ராஜேந்தரையும் உஷாவையும் திருப்திப்படுத்தும் விதமாக வகை வகையாக சமைக்கிறார் சிம்பு. சைவம், அசைவம் என இருவகை உணவு களையும் சமைக்கும் மகனின் கைப்பக்கு வத்தை அவரது பெற்றோர் மிகவும் ரசிக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!