11 பெண்களை மீட்ட விஜய்

ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்லமுடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் நடிகர் விஜய்.

சென்னையைச் சேர்ந்த தேவிகா உள்ளிட்ட 11 பெண்கள் கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் அவர்களால் சென்னை திரும்ப முடியவில்லை.

கையில் இருந்த பணம் சில தினங்களில் செலவான நிலையில் பேருந்து நிலையங்களிலும் கோவில்களிலும் மாறி மாறி தங்கி நாட்களைக் கடத்திய அவர்களால் ஒருகட்டத்தில் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை.

அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் திண்டாடிய அப்பெண்கள் குறித்து தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் விஜய்க்குத் தெரிய வந்தது.

இதையடுத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேசிய விஜய், அந்தப் பெண்களை பத்திரமாக சென்னைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.

அதன்பேரில் அரசிடம் முறையாக அனுமதி பெற்று அந்தப் பெண்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!