‘மனவலியுடன் இருக்கிறேன்’

அண்­மைக் கால­மாக பிரியா பவானி சங்­க­ரி­ட­மி­ருந்து எந்­தத் தக­வ­லும் இல்­லையே என்று ரசி­கர்­கள் யோசித்­துக் கொண்­டி­ருக்க, ஓரிரு நாட்­க­ளுக்கு முன்­பான அவ­ரது டுவிட்­டர் பதிவு ஒன்று பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதை­ய­டுத்து அவ­ரது காத­லில் சிக்­கல் முளைத்­தி­ருக்­க­லாம் என்று ஒரு பேச்சு கிளம்­பி­யுள்­ளது.

“கிடைத்த தோளில் சாய்ந்து, அடுத்த வாழ்க்­கைக்கு நான் தயா­ராக இல்லை,” என்­பதே பிரி­யா­வின் அண்­மைய டுவிட்­டர் பதி­வா­கும். இதை­ய­டுத்து மேலும் சில வரி­களை அவர் எழு­தி­யுள்­ளார். கடந்­தாண்டு சித்ரா பௌர்­ண­மிக்­கும் இந்­தாண்­டுக்­கும் இடையே தன் வாழ்க்­கை­யில் நிறைய விஷ­யங்­கள் நடந்­தி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தற்­போது தாம் தனி­மை­யில் இருப்­ப­தா­க­வும் மனம் நிறைய வலி­க­ளைச் சுமந்து கொண்­டி­ருப்­ப­தா­க­வும் பிரியா குறிப்­பிட்­டி­ருப்­பது அவ­ரது நெருங்­கிய நட்பு வட்­டத்­தையே கூட குழப்­பத்­தி­லும் அதிர்ச்­சி­யி­லும் ஆழ்த்­தி­யுள்­ளது.

“சித்ரா பௌர்­ண­மி­யன்று திரு­வண்­ணா­ம­லை­யில் கிரி­வ­லம் வந்­தால் மன­தில் நினைத்­தது மூன்று மாதங்­களில் நடக்­கும் என நண்­பன் சொன்­னான் என்று கடந்­தாண்டு சென்­றேன். கட­வுள் கேட்­ட­தைக் கொடுக்­க­வில்லை என்­றா­லும் பர­வா­யில்லை. ஆனால் கிழித்து என் முகத்­தி­லேயே எறிந்து கைதட்­டிச் சிரித்­தார். கடந்த ஆண்­டும் இந்­தாண்­டும் என இரு சித்ரா பௌர்­ண­மி­க­ளுக்கு இடையே என் வாழ்க்­கை­யில் என்­னென்­னவோ நடந்­து­விட்­டது.

“இன்­றைக்கு உல­கமே தனி­மை­யில் இருப்­பது போல் நானும் தனி­மை­யில்­தான் இருக்­கி­றேன். பர­வா­யில்லை, மாற்­றங்­கள் தரு­கிற வலி­கள் பழ­கி­வி­டக்­கூ­டும். வலித்து மரத்து அடங்­கி­ய­பின் வரும் தெளிவு அழகு,” என்று தமது பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார் பவானி சங்­கர்.

எனி­னும் அடுத்த நாள் காலை­யில் இந்­தப் பதிவை அவ­ரது டுவிட்­டர் பக்­கத்­தில் காண­வில்லை. அதே­ச­ம­யம் அவ­ரது பதி­வில் உள்ள இரண்டு வரி­கள் நண்­பர்­களை அதி­கம் யோசிக்­க­வும் குழம்­ப­வும் வைத்­தி­ருக்­கின்றன.

“தனி­மை­யில் மொட்டை மாடி­யில் மனம் நிறைய வலி­க­ளு­டன் நிற்­கி­றேன். ஆனால், இந்­தத் தனிமை கிடைத்த கைக­ளைப் பற்­றிக்­கொண்டு, கிடைத்த தோளில் சாய்ந்­து­கொண்டு அடுத்த வாழ்க்­கைக்­குத் தயா­ராக என்­னைத் தூண்­ட­வில்லை,” என்று தெரி­வித்­துள்­ளார் பிரியா.

இந்த வரி­கள்­தாம் ரசி­கர்­க­ளை­யும் பத­ற­வைத்­துள்­ளது. இந்­நி­லை­யில் பிரி­யா­வின் சினிமா வாழ்க்­கை­யில் எந்­த­வித பிரச்­சி­னை­யும் இல்லை என்­றும் தனிப்­பட்ட வாழ்க்­கை­யில்­தான் ஏதோ பிரச்­சினை நில­வு­கிறது என்­றும் அவ­ரது நண்­பர்­கள் தெரி­வித்­த­தாக தமி­ழக ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மேலும், பிரியா கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்­டி­ருந்­த­போது சக மாண­வ­ரான ராஜ்­வேல் என்­ப­வ­ரைக் காத­லித்­தார் என்­றும் படிப்பு முடிந்த பிற­கும் காதல் நீடித்­த­தா­க­வும் அந்த ஊட­கம் குறிப்­பிட்­டுள்­ளது.

“கல்­லூரி முடிந்­த­தும் உயர்­ப­டிப்­புக்­காக ஆஸ்­தி­ரே­லியா சென்ற ராஜ்­வேல் அங்­கேயே ஒரு பணி­யி­லும் சேர்ந்து விட்­டார். பிரி­யாவோ ஊட­கத் துறைக்­குள் வந்து அங்­கி­ருந்து பின்­னர் சினி­மா­வுக்­குள் நுழைந்து விட்­டார்.

“ஆளுக்­கொரு திசை­யில் பய­ணித்த போதும் இரு­வ­ருக்­கும் இடை­யே­யான காதல் எந்­த­வித சேதா­ர­மும் இன்றி அப்­ப­டியே நீடித்­தது. மேலும் இந்­தக் காத­லுக்கு இரு வீட்­டி­லுமே ஆத­ரவு இருந்­தது. பிறகு ஏன் பிரியா இப்­படி ஒரு பதி­வைச் செய்­துள்­ளார்?” என்று அவ­ரது நட்பு வட்­டா­ரத்­தில் உள்ள பல­ரும் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர்.

கடந்த ஜன­வரியில் கூட காத­ல­ருக்­குப் பிறந்­த­நாள் வாழ்த்­துத் தெரி­வித்து நெகிழ்ச்­சி­யா­கப் பதி­விட்டார் பிரியா. தமக்கு ஒரு பெண்­கு­ழந்தை பிறந்­தால் அது தன் காத­ல­னைப் போன்று இருக்க வேண்­டும் எனக் கட­வுளை வேண்­டு­வ­தா­க­வும் அந்­தப் பதி­வில் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

“பிரி­யா­வைப் பற்றி பல கிசு­கி­சுக்­கள் வெளி­யா­ன­போ­தும் ராஜ்­வேல் கண்­டு­கொள்­ள­வில்லை. இரு­வ­ருமே இது­போன்ற சங்­க­டங்­களை வெற்­றி­க­ர­மா­கக் கடந்­த­னர். இந்­நி­லை­யில் இந்த ஆரோக்­கி­ய­மான காத­லில் விரி­சல் ஏற்­பட்டுவிட்­டதோ என்று கவ­லை­யாக உள்ளது,” என பிரி­யா­வின் நட்பு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­த­தாக தமி­ழக ஊட­கச் செய்­தி­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இனி பிரியா மனம் திறந்தால்தான் குழப்பம் முடிவுக்கு வரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!