சாந்தனு, கீர்த்தியின் குறும்படம்

திரை நட்­சத்­தி­ரங்­கள் பல­ரும் கொரோனா விவ­கா­ரத்­தால் வீட்­டில் முடங்கி இருந்­தா­லும் அவ்­வப்­போது கைபே­சி­யில் சில காணொ­ளி­களை எடுத்து அவற்றை சமூக வலைத்­தளங்­களில் பகிர்ந்து வரு­கி­றார்­கள்.

அந்த வகை­யில் நடி­கர் சாந்­தனு தன் மனைவி கீர்த்­தி­யு­டன் இணைந்து வீட்­டில் இருந்­த­ப­டியே ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற குறும்­ப­டத்தை உரு­வாக்கி உள்­ளார்.

அதில் காலை தூங்கி எழுந்­தது முதல் அனைத்து வீட்டு வேலை­க­ளை­யும் சாந்­த­னுவே செய்­கி­றார்.

சமைப்­பது, துணி துவைப்­பது, வீட்டை சுத்­தப்­ப­டுத்­து­வது என்று பம்­ப­ர­மா­கச் சுழல்­ப­வர், மதிய உண­வுக்கு தயிர்­சா­தம், ஊறு­காய் தயார் செய்­வதாக கூற, அதற்கு கீர்த்தி, தனக்கு உரு­ளைக்­கி­ழங்கு பொரி­யல் வேண்­டும் என்­கி­றார்.

சாந்­தனு அதை­யும் தயா­ரிக்­கி­றார். பிறகு அனைத்து வேலை­க­ளை­யும் முடித்­து­விட்டு ஓய்வு எடுக்கும்போது தமக்கு தேநீர் வேண்­டும் என்­கி­றார் கீர்த்தி.

இந்­நி­லை­யில் சட்­டென தூக்­கத்­தில் இருந்து சாந்தனு எழு­கி­றார். அப்­போது தான் அனைத்­தும் கனவு என்று அவ­ருக்­குப் புரி­கிறது.

எனி­னும் வீட்­டுப் பெண்­க­ளின் வேலையை ஒரு நாள் செய்­வ­தற்கே இவ்­வ­ளவு சிர­மம் என்­றால், ஊரடங்­கின்போது அவர்­கள் எந்­த­ளவு சிரமப்­ப­டு­வார்­கள் என்று கேள்வி எழுப்­பும் சாந்­தனு, வீட்டு வேலை­களில் ஆண்­களும் சில­வற்­றைப் பகிர்ந்துகொள்ள வேண்­டும் என அறி­வு­றுத்­து­கி­றார்.

இந்த குறும்­ப­டத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!