‘கம்பீரமாக உணர்ந்தேன்’

பல்­வேறு எதிர்ப்­பு­கள், சல­ச­லப்­பு­க­ளைக் கடந்து வெற்­றி­க­ர­மாக நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கிறது ‘பொன்­ம­கள் வந்­தாள்’ திரைப்­ப­டம்.

திரை­ய­ரங்­கு­களைத் தவிர்த்து இவ்­வாறு வெளி­யி­டு­வ­தற்கு கொரோனா கிரு­மித் தொற்று விவ­கா­ரம் மட்­டுமே கார­ணம் என்­கிறது படத் தயா­ரிப்­புக் குழு. இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­புக்கு எதிர்­பார்த்­ததைவிட பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ள­தாம். இத­னால் படக்­குழு உற்­சா­கத்­தில் உள்­ளது.

இப்­ப­டத்­தில் ஜோதி­கா­வின் பெயர் ‘வெண்பா’ என்­றும் அவர் அமர்வு நீதி­மன்ற வழக்­க­றி­ஞ­ராக நடித்­துள்­ளார் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

“முன்பு காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்­த­போது மன­தில் ஒரு­வித தைரி­யம், மிடுக்கு, கம்­பீ­ரம் ஆகி­ய­வற்றை உண­ர­ மு­டிந்­தது எனில், வழக்­க­றி­ஞர் உடையை அணிந்­த­போது அந்த உணர்­வு­கள் இரு­ம­டங்­காக இருந்­தன. ஒரு வலு­வான பெண்­ம­ணி­யாக என்னை உணர்ந்­தேன்.

“அதே­ச­ம­யம் வழக்­க­றி­ஞ­ராக நடிக்­கும்­போது சண்­டைக்­காட்­சி­களில் நடித்து ரசி­கர்­களை ஏமாற்ற முடி­யாது. பெரிய வச­னங்­க­ளைப் பேசி நடிக்­க­வேண்­டும். நாம் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரத்­துக்­கான வச­னங்­க­ளின் பலம், வீரி­யம் குறைந்­து­வி­டக்­கூ­டாது.

“அதி­லும் எனக்­கெ­திரே நடிப்­ப­வர் பார்த்தி­பன் சார். அவ­ரு­டைய தமிழும் நடிப்பும் எப்­ப­டிப்­பட்­டது என்­பது அனை­வ­ருக்­கும் தெரியும். அத­னால் மூன்று, நான்கு பக்கங்கள் உள்ள நீள­மான வச­னங்­களை நன்கு மனப்­பா­டம் செய்து நடித்­தேன்.

“ஒரு­வ­கை­யில் இயக்­கு­நர் ஃபிரெட்ரிக்குக்கு நன்றி தெரி­விக்க வேண்­டும். மூன்று மாதங்­க­ளுக்கு முன்பே இப்­ப­டத்­தின் முழு வச­னங்­க­ளை­யும் என்­னி­டம் ஒப்­ப­டைத்து விட்­டார்.

“அத­னால் ஒவ்­வொரு வச­னத்­தை­யும் நன்கு உள்­வாங்­கிக் கொண்டு கதையை உணர்ந்து நடிக்க முடிந்­தது,” என்று சொல்­லும் ஜோதிகா, தாம் இது­வரை நடித்த படங்­க­ளி­லேயே அதிக உழைப்­பைக் கொட்­டி­யது இந்­தப் படத்­துக்­கு­த்தான் என்­கி­றார்.

கார­ணம், ‘பொன்­ம­கள் வந்­தாள்’ கதை இவ­ரது மன­துக்கு நெருக்­க­மான ஒன்­றாக அமைந்­து­விட்­ட­தாம்.

இந்­தப் படத்­தில் பாக்­ய­ராஜ், தியா­க­ரா­ஜன், பார்த்­தி­பன், பாண்­டி­ய­ரா­ஜன், பிர­தாப் போத்­தன் என ஐந்து இயக்­கு­நர்­க­ளு­டன் நடித்­தது மறக்­க­மு­டி­யாத அனு­ப­வம் என்று குறிப்­பி­டு­ப­வர், இந்த அனு­ப­வ­சா­லி­க­ளி­டம் இருந்து நிறைய கற்­றுக்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

“இவர்­கள் ஐந்து பேரும் எப்­படி கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ப தங்­க­ளைத் தயார் செய்­து­கொள்­கி­றார்­கள், நீள­மான வச­னங்­களை எப்­ப­டி எளிதாக கையாள்­கி­றார்­கள், வார்த்­தை­களை எப்­படி உச்­ச­ரிக்­கி­றார்­கள் என பல­வற்றை நேர­டி­யா­கப் பார்த்து தெரிந்து­கொண்­டேன்.

“சக நடி­கை­க­ளான ரேவதி, ஊர்­வசி போன்­ற­வர்­க­ளி­டம் சில­வற்­றைக் கற்­றுக்­கொண்­டது போல் இந்த இயக்­கு­நர்­க­ளி­ட­மும் கற்­றுக்­கொள்ள பல விஷ­யங்­கள் இருந்­தன,” என்று சொல்­லும் ஜோதிகா, ‘சந்­தி­ர­முகி’ இரண்­டாம் பாகம் உரு­வா­கும் பட்­சத்­தில் அதில் நாய­கி­யாக நடிக்க சிம்­ரன் பொருத்­த­மா­ன­வ­ராக இருப்­பார் என்­கி­றார்.

“நான் ஒரு வட இந்­தி­யப் பெண் என்­பதை யாருமே நினை­வில் வைத்­துக்­கொள்­வ­தில்லை. எனக்­கான கதா­பாத்­தி­ரத்­துக்கு நீள­மான வச­னங்­களை எழு­தி­வி­டு­கி­றார்­கள்.

“‘பொன்­ம­கள் வந்­தாள்’ படப்­பி­டிப்­பில் தின­மும் இயக்­கு­நர் ஃபிரெட்­ரிக் கையில் 35 பக்­கம் கொண்ட புத்­த­கத்­தைப் பார்க்க முடி­யும்.

“காலை 9 மணி­யி­லி­ருந்து மாலை 6 மணி வரை ஏதே­னும் இரண்டு பாத்­தி­ரங்­கள் பேசிக் கொண்டே இருப்­பார்­கள்.

“அவ­ரும் அலுக்­கா­மல் அக்­காட்­சி­க­ளைப் பட­மாக்­கு­வார்.

“நாங்­கள் அவ்­வ­ளவு வச­னங்­கள் பேசி­யி­ருக்­கி­றோம்.

“பாக்­ய­ராஜ் சார் பார்த்­தி­பன் சார் இரு­வ­ரும் ஒரு­முறை படித்­து­விட்டு வச­னத்­தைப் பேசி விடு­வார்­கள்.

“ஆனால் எனக்கு அவ்­வாறு பேசி நடிக்க மூன்று மாதங்­கள் தேவைப்­பட்­டன,” என்று சொல்­லும் ஜோதிகா, இப்­போது எல்­லாம் வணிக அம்­சங்­கள் மட்­டுமே கொண்ட கதை­களில் நடிக்க விருப்­ப­மில்லை என்­கி­றார்.

ஒரே ஒரு பாட­லுக்கு நட­ன­மா­டு­வ­தி­லும் அல்­லது கதா­நா­ய­க­னைச் சுற்றி வரு­வ­தி­லும் ஆர்­வம் குறைந்து­விட்­ட­தாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!