சுடச் சுடச் செய்திகள்

உடைகளை ஏலம்விட்டு கொரோனா நிதி திரட்டும் நித்யா மேனன்

கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குத் திரை­உ­ல­கத்­தி­னர் பல்­வேறு வகை­களில் நிவா­ரண நிதி திரட்டி வரு­கின்­ற­னர்.

மேலும் தங்­கள் பங்­குக்­குத் தனிப்­பட்ட வகை­யி­லும் நிதி அளித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் நடிகை நித்யா­ மே­னன் தாம் உடுத்­திய ஆடை­களை ஏலம் விடப்­போ­கி­றா­ராம். அதன்­மூ­லம் கிடைக்­கும் தொகையை, கொரோனா நிவா­ரண நிதிக்­காக அளிப்­பது இவ­ரது திட்­டம்.

‘மெர்­சல்’, ‘24’, ‘சைக்கோ’ உள்­ளிட்ட படங்­க­ளின் மூலம் தமிழ் ரசி­கர்­களை கவர்ந்­தி­ருக்­கும் நித்யா, சில மாதங்­க­ளுக்கு முன்பு நடந்த ஆடை அலங்­கார அணி­வ­குப்பு நிகழ்வில் (ஃபேஷன் ஷோ) பங்­கேற்­றார்.

அது தொடர்­பாக பல­ரும் அவ­ருக்­குப் பாராட்­டுத் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில் அந்த நிகழ்ச்­சி­யில் தாம் உடுத்­திய உடை­யைத்­தான் தற்­போது ஏலம் விடப் போகி­றா­ராம்.

இது சாதா­ரண உடை­அல்­ல­வாம். பிர­பல ஆடை வடி­வ­மைப்­பா­ளர் பல மாதங்­கள் யோசித்து உரு­வாக்­கிய உடை­யாம்.

“இந்த உடையை ஏலத்­திற்கு கொடுக்­க­லாம் என்ற எண்­ணம் மன­தில் தோன்­றி­ய­தும் நெருக்­க­மான சில­ரி­டம் இது­கு­றித்து தெரி­வித்­தேன். இது நல்ல யோசனை என்று அவர்­களும் ஊக்­கம் தந்­த­னர்.

“நான் ஒன்­றும் உல­க­றிந்த ஒரு பிர­பல நடிகை அல்ல. அத­னால் பெரும்­தொகை திர­ளும் என எதிர்­பார்க்­க­வில்லை.

“ஆனால் எந்­தத் தொகை கிடைத்­தா­லும் 100 விழுக்­காடு அறக்­கட்­ட­ளைக்­குத்­தான் செல்­லும். அந்த அறக்­கட்­டளை நிர்­வா­கி­கள் கிரா­மப்­பு­றங்­களில் கொரோனா கிருமி விவ­கா­ரத்­தால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் ஏழை மக்­க­ளுக்கு உதவி செய்­வர்.

“ஏழை­க­ளுக்­குப் பண உதவி செய்து, மீண்­டும் அவர்­கள் சொந்­தக்­கா­லில் நிற்க வழி செய்­வர்.

“வாழ்­வா­தா­ரங்­களை இழந்து நிற்­கும் ஆத­ர­வற்­ற­வர்­க­ளுக்கு நம்­மால் முடிந்த உத­வி­க­ளைச் செய்­ய­வேண்­டும்,” என்று சொல்­லும் நித்­யா­ மே­னன், தனது இந்த உடை­களை ஏலம் விடும் நிகழ்வு குறித்து பர­வ­லாக பல­ருக்­கும் தெரியப்படுத்தி வரு­கி­றா­ராம்.

முன்பு பங்­கேற்ற அந்த ‘ஃபேஷன் ஷோ’ குறித்­தும் அதில் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­க­ளை­யும் சமூக வலைத்தளங்­களில் பதி­விட்டு வரு­கி­றார்.

அதி­க­மா­னோரை இந்த விவ­ரம் சென்­ற­டைந்­தால் தனது அடுத்­த­டுத்த முயற்­சி­க­ளுக்கு ஆத­ரவு கிடைக்­கும் என நம்­பு­கி­றா­ராம்.

“அக்­கு­றிப்­பிட்ட நிகழ்ச்­சி­யில் நான் உடுத்­திய ஆடை எனக்­காக என்றே சிறப்பாக உரு­வாக்­கப்­பட்­டது. ‘ரேம்ப் வாக்’ செய்­வ­தற்­கா­கத்­தான் இந்த உடை­யைத் தயார் செய்­யும்­படி கேட்­டி­ருந்­தேன்.

“அந்த நிகழ்ச்சி தொடர்­பான புகைப்­ப­டங்­கள் ஏற்­கெ­னவே இன்ஸ்­ட­கி­ரா­மில் வெளி­யி­டப்­பட்­டன. அதை எனது தீவிர ரசி­கர்­கள் பார்த்­தி­ருக்­கக்­கூ­டும்,” என்­கி­றார் நித்யா.

இந்த சிறப்­பு­மிக்க இந்த ஆடையை வடி­வ­மைத்­த­வர் இவ­ரது தோழி காவேரி. அவர் மிக அழ­கான இயற்­கை­யா­கத் தெரி­யும் ஆடை­க­ளைத் தயா­ரிப்­ப­தில் கைதேர்ந்­த­வ­ராம்.

“என்னைப் போன்று மேலும் பல திரையுலகப் பிரபலங்கள் நிதி திரட்ட முன்வந்தால் மகிழ்வேன்.

“அவர்களுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளேன். ஏழைகளின் பிரச்சினைகள் முடிவுக்கு வந்தால் போதும்,” என்கிறார் நித்யா மேனன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon