புற்றுநோயை வெற்றி கொண்ட இயக்குநர்

இயற்கை தான் எல்­லோ­ரை­யும்விட பெரி­யது என்­பதை கொரோனா கிருமி தெளி­வாக உணர்த்­தி­விட்­டது என்­கி­றார் இயக்­கு­நர் ரமணா.

இந்­தப் பாடத்தை யாரும் மறக்கக் கூடாது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

விஜய் ரசி­கர்­க­ளால் ரம­ணாவை அவ்­வ­ளவு எளி­தில் மறந்­து­விட இய­லாது. கார­ணம், இவர் இயக்­கிய ‘திரு­மலை’ படத்­துக்­குப் பிறகு­தான் விஜய்யை அனை­வ­ரும் ஆக்­‌ஷன் நாய­க­னா­கப் பார்க்­கத் துவங்­கி­னர்.

அதை­ய­டுத்து மீண்­டும் விஜய்யை வைத்து ‘ஆதி’; தனுஷ் நடிப்­பில் ‘சுள்­ளான்’ ஆகிய வெற்றிப் படங்­களை இயக்­கி­னார்.

அந்­தச் சம­யத்­தில் திடீ­ரென கடும் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்டு முடங்­கி­னார் ரமணா. எனி­னும் அவர் போராட்­டத்­தைக் கைவி­ட­வில்லை. இரண்டு ஆண்­டு­கள் தன்­னம்­பிக்­கை­யு­டன் போராடி நோயி­லி­ருந்து மீண்­டார்.

தாம் எதிர்­கொண்ட புற்­று­நோய்க்கு எதி­ரான போரில் வெற்றி கண்­ட­வ­ருக்கு இந்த கொரோனா ஊர­டங்கு எத்­த­கைய அனு­ப­வத்தை தந்­தது என்­பதை அவர் சொல்­லக் கேட்­போம்.

“ஒரு மனி­த­னுக்கு என்­ன­தான் உண்­மை­யான தேவை? காரில் போவது, ஆடம்­பர உண­வ­கத்­துக்­குப் போய் சாப்­பி­டு­வது, ஆடை­கள் வாங்­கு­வது, மால்­க­ளுக்­குச் செல்­வது என்­ப­வை­தான் மனி­த­னுக்கு முன்பு வேண்­டி­ய­தாக இருந்­தது.

“ஆனால், இருப்­ப­தைத் தக்க வைத்­தி­ருப்­பதே சிறப்பு என்­பதை இந்த ஊர­டங்கு உணர்த்­தி­விட்­டது. இந்த ஊர­டங்கு விரும்­பியோ விரும்­பா­மலோ எல்­லோ­ரை­யும் சமத்­து­வப்­ப­டுத்­தி­விட்­டது.

“காலை­யில் மூன்று இட்லி, மதி­யம் கொஞ்­சம் சாம்­பார் சாதம், ஒரு கூட்டு என நிறுத்­தி­விட்­டது. குடும்­பம் சாந்­த­மா­கி­விட்ட புரி­தல் நடந்­தி­ருக்­கிறது.

“வாழ்­வ­தற்­கான செலவு குறை­வு­தான். அடுத்­த­வர் மாதிரி வாழ்­வ­தற்­கான செல­வு­தான் அதி­கம் எனப் புரிந்­து­விட்­டது. நம் குழந்­தை­கள் இந்த 50 நாட்­களில் வாழ்­வி­யல் பயிற்சி பெற்­றி­ருக்­கி­றார்­கள்.

“தூக்கி தலை­மேல் வைத்து செல்­லம் கொடுத்து வளர்த்த குழந்­தை­க­ளுக்கு நடப்பு புரிந்­தி­ருக்­கிறது. மனி­தத்­தன்மை வெளி­வ­ரு­கிறது. ஆண்­கள் ஐம்­பது நாட்­க­ளுக்கு மேல் பெண்­க­ளின் தாலி­ய­றுத்து குடிக்­கா­மல் இருந்­தார்­கள்.

“இனி­மேல் சுய ஒழுக்­க­மும், கட்­டுப்­பா­டும் மட்­டுமே நம்­மைப் பாது­காக்­கும். சுய­சிந்­தனை, சுய­ப­ரி­சோ­தனை இருந்­தால் மட்­டுமே இனி உயிர்த்­தி­ருக்க முடி­யும். இனி யாரும் எதற்­கும் கவ­லைப்­பட்­டுக் கொண்­டி­ருக்க முடி­யாது.

“இந்த சம­யம் இயற்கை தன்னை புதுப்­பித்­துக் கொள்­கிற நேரம். நாம் இப்­போது நாம் அனை­வ­ரும் எளிமை நோக்கி நகர வேண்­டும்,” என்­கி­றார் ரமணா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!