‘பாக்ஸர்’ படத்திற்காக ஜானியிடம் பயிற்சி பெற்ற அருண் விஜய்

விவேக் இயக்கத்தில் அருண் விஜய், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பாக்ஸர்’. இதில் அருணுக்கு குத்துச்சண்டை வீரர் கதாபாத்திரம் என்று சொல்லத் தேவையில்லை. இந்தப் படத்திற்காக சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானியிடம் அருண் விஜய் குத்துச்சண்டை பயிற்சி பெற்றாராம். படத்தில் அடிதடிக்கும் அதிரடிக்கும் பஞ்சமே இருக்காது என்கிறார் இயக்குநர் விவேக். இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.