தனது வாழ்க்கையைப் பற்றி மாணவர்களிடம் உருக்கமாகப் பேசிய ஐஸ்வர்யா ராஜே‌ஷ்

ஐஸ்­வர்யா ராஜேஷ் பல்­வேறு போராட்­டங்­க­ளைக் கடந்து திரை­யு­ல­கில் தன்னை நிலைப்­ப­டுத்­திக் கொண்­ட­வர். அண்­மை­யில் திருச்­சி­யில் உள்ள ஒரு கல்­லூ­ரி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசிய அவர், தன் வாழ்க்­கை­யில் நடந்த பல்­வேறு உருக்­க­மான நிகழ்­வு­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டுள்­ளார். அவை மாண­வர்­க­ளைக் கண்­க­லங்க வைத்­த­தாம். இனி அவர் பேசி­ய­தைக் கேட்­போம்.

“என்­னு­டைய பய­ணம் என்­பது வழக்­க­மான ஒன்­றல்ல. வலி, வெற்றி, மகிழ்ச்சி என எல்­லா­மும் கலந்த கலவை. சென்­னை­யில் பிறந்து வளர்ந்த எனக்கு மூன்று அண்­ணன்­கள். எட்டு வய­தா­ன­போது அப்பா இறந்­து­விட்­டார். பிறகு அம்­மா­தான் எங்­க­ளுக்கு அப்­பா­வா­க­வும் இருந்து பார்த்­துக்­கொண்­டார். மும்பை சென்று புட­வை­கள் வாங்­கி­வந்து அவற்­றைச் சென்­னை­யில் விற்­றார். ஆயுள்­காப்­பீட்டு முக­வ­ரா­க­வும் வேலை பார்த்­தி­ருக்­கி­றார்.

“எனக்கு 12 வய­தா­கும்­போது பெரிய அண்­ண­னும் திடீ­ரென இறந்து போனார். அந்த சோகத்­தில் இருந்து அம்­மாவை மீட்­டெ­டுக்க மிக­வும் சிர­மப்­பட்­டோம். அம்மா மிகச்­சி­றந்த போராளி. ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்த நான் இன்று நடி­கை­யாக உங்­கள் முன் நிற்­கி­றேன் என்­றால் அதற்கு அவர்­தான் கார­ணம்.

“இரண்­டா­வது அண்­ணன் படிப்பை முடித்த பிறகு வேலைக்­குச் சென்­ற­தும் அம்­மா­வுக்கு அப்­ப­டி­யொரு மகிழ்ச்சி. குடும்­பத்­தைக் கரை­சேர்த்­து­வி­ட­லாம் என்று அவர் நிம்­ம­தி­யாக இருந்த நேரத்­தில்­தான் ஒரு சாலை விபத்­தில் அவ­ரும் இறந்­து­போ­னார். அப்­போ­து­தான் குடும்­பத்­துக்கு ஏதே­னும் செய்­ய­வேண்­டும் என்ற எண்­ணம் ஏற்­பட்­டது.

“மார்க்­கெட்­டிங் வேலை­யில் சேர்ந்­தேன். பிறகு பிறந்­த­நாள், திரு­மண நாள் போன்ற நிகழ்­வு­களில் கலந்­து­கொண்டு அறி­விப்­பு­கள் செய்­வது, விருந்­தி­னர்­களை உப­ச­ரிப்­பது எனப் பணி­யாற்­றி­ய­தில் கொஞ்­சம் பணம் கிடைத்­தது. அடுத்து தொலைக்­காட்­சித் தொடர்­களில் நடித்­தேன். நாள்­தோ­றும் 1,500 ரூபாய் தந்­த­னர். அதி­கம் சம்­பா­திக்க வேண்­டும் என அம்­மா­வி­டம் புலம்­பி­ய­போது அவர்­தான் சினி­மா­வில் நடிக்­க­லாமே என்று முதன்­மு­த­லாக ஆலோ­சனை சொன்­னார்.

“இதற்­கி­டை­யில் நட­னம் கற்­றுக்­கொண்டு ‘மானாட மயி­லாட’ நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று வெற்றி பெற்­றேன். அதை வைத்து சினிமா வாய்ப்பு தேடி­ய­போது ‘அவர்­களும் இவர்­களும்’ என்ற படத்­தில் நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது. அந்­தப் படம் சரி­யா­கப் போக­வில்லை. என் திரைப்­ப­ய­ணத்­தில் பாலி­யல் தொந்­த­ர­வு­கள் மட்­டு­மல்ல, எனது தோற்­றம், நிறம், அழகு என்று பல­வற்­றைப் பற்­றிய மோச­மான விமர்­ச­னங்­க­ளை­யும் எதிர்­கொண்­டுள்­ளேன்.

“சில இயக்­கு­நர்­கள் கதா­நா­ய­கிக்­கு­ரிய அம்­சங்­கள் என்­னி­டம் இல்லை என வெளிப்­ப­டை­யாக என்­னி­டமே கூறி­யி­ருக்­கி­றார்­கள். பிறகு ‘அட்­ட­கத்தி’ அமுதா கதா­பாத்­தி­ரம் ஓர­ளவு பெயர் வாங்­கிக் கொடுத்­தது. ‘பண்­ணை­யா­ரும் பத்­மி­னி­யும்’, ‘ரம்மி’ உள்­ளிட்ட படங்­களில் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தேன். ‘காக்கா முட்டை’ படம்­தான் என் வாழ்க்­கையை மாற்றி அமைத்­தது. அதன் இயக்­கு­நர் மணி­கண்­டன்­தான் எனக்கு நடிக்க கற்­றுக் கொடுத்­தார்.

“ஆனால் அந்­தப் படம் வெளி­யா­ன­பி­றகு பாராட்­டு­கள் குவிந்­த­னவே தவிர, அடுத்த ஓராண்­டுக்கு எந்த வாய்ப்­பும் கிடைக்­க­வில்லை. ‘வட­சென்னை’யில் தனுஷ், ‘தர்­ம­துரை’யில் விஜய் சேது­பதி என்று ஒரு­சி­லர்­தான் என் திற­மையை மதித்து வாய்ப்பு தந்­த­னர். பெரிய நாய­கர்­க­ளு­டன் நடிக்க வாய்ப்பு வர­வில்லை என்­றா­லும் நாமே ஏன் ஒரு படத்­தின் நாய­க­னாக இருக்­கக்­கூ­டாது என்று தோன்­றி­யது. அது­தான் ‘கனா’.

“கிட்­டத்­தட்ட ஆறு மாதங்­கள் கிரிக்­கெட் பயிற்சி பெற்­றேன். அந்­தப் படம் மற்­றொரு திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது. தற்­போது நாய­கியை மையப்­ப­டுத்தி நிறைய கதை­களும் வாய்ப்­பு­களும் தேடி­வ­ரு­கின்­றன. இவை அனைத்­துக்­கும் என்­மேல் நான் வைத்­தி­ருந்த நம்­பிக்­கை­தான் கார­ணம். எனக்கு ஆத­ர­வாக யாரும் இல்லை. நான் ஒருத்தி மட்­டுமே இருக்­கி­றேன்,” என்­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!