நயன்தாராவின் நிபந்தனை

‘மூக்­குத்தி அம்­மன்’ படப்­பி­டிப்­பைத் திட்­ட­மிட்ட தேதிக்­கு முன்­பா­கவே முடித்­து­விட்­ட­தா­கச் சொல்­கி­றார் அதன் இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ரான ஆர்.ஜே. பாலாஜி.

தமிழ் சினி­மா­வில் கடந்த 15 ஆண்­டு­க­ளாக யாருமே அம்­மன் படம் எடுக்­க­வில்லை என்று சுட்­டிக்­காட்­டு­ப­வர், தான் நினைத்­த­தை­விட ‘மூக்­குத்தி அம்­மன்’ சிறப்­பாக உரு­வாகி இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

நயன்­தாரா அம்­மன் அவ­தா­ரம் எடுக்­கும் முதல் படம் இது. அவ­ரு­டன் மோதும் வில்­ல­னாக அஜய் கோஷ் நடித்­துள்­ளார். அம்­மன் படத்­தில் இடம்­பெ­றும் வில்­லன் எப்­படி இருக்க வேண்­டும் என தமிழ் சினிமா ரசி­கர்­கள் எதிர்­பார்ப்­பார்களோ அதை அப்­ப­டியே திரை­யில் பிர­தி­ப­லித்­துள்­ளா­ராம் அஜய் கோஷ்.

கடந்த 40, 50 ஆண்­டு­க­ளாக கோடம்­பாக்­கத்­தில் தயா­ரா­கும் அம்­மன் படங்­களில் நிச்­ச­யம் பின்­ன­ணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்­வ­ரி­யின் குரல் ஒலிக்­கும். இந்­தப் படத்­தி­லும் அவர் பாடி­யுள்­ளா­ராம். அம்­மன் புண்­ணி­யத்­தில் படம் நன்­றாக வந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் ஆர்.ஜே. பாலாஜி.

இப்­ப­டத்­தின் கதையை முதன்­மு­றை­யாக கேட்­ட­போதே நயன்­தா­ரா­வுக்கு மிக­வும் பிடித்­துப் போன­தாம். உட­ன­டி­யாக ஒரு நிபந்­தனை விதித்­தி­ருக்­கி­றார்.

“சாமி படம் எடுக்­கப்போகி­றோம். எனவே எல்­லாம் சுத்­த­பத்­த­மாக இருக்­க­வேண்­டும். அனை­வ­ரும் சில கட்­டுப்­பா­டு­க­ளைக் கடை­ப்பி­டிக்க வேண்­டும்,” என்று அவரே முன்­வந்து சொன்­னா­ராம்.

“படக்­கு­ழு­வில் இருந்த மற்­ற­வர்­களும் இதே மன­நி­லை­யில்­தான் இருந்­தோம். அத­னால் நயன்­தா­ரா­வின் நிபந்­தனை அனை­வ­ருக்­கும் பிடித்­தி­ருந்­தது.

“நயன்­தா­ரா­வைப் பொறுத்­த­வரை ஒரு படத்­தில் ஒப்­பந்­த­மாகிவிட்­டால் இறு­தி­வரை அர்ப்­ப­ணிப்­பு­டன் இருப்­பார். அவ­ரது ஈடு­பாட்­டைப் பார்க்­கும் மற்­ற­வர்­க­ளுக்­கும் அதே மன­நிலை வந்­து­வி­டும்.

“பொது­வாக காலை­யில் படப்­பி­டிப்­புக்கு வந்­தார் என்­றால் முதல் காட்சி பட­மாக்­கப்­ப­டும்­ வரை பசி­யா­றக்­கூட மாட்­டார். அது­தான் அவ­ரது வழக்­கம். இந்­தப் படத்­துக்­காக இன்­னும் ஒரு­படி மேலே சென்று படம் முடி­யும்­வரை சைவ­மாக மாறி­விட்­டார்,” என்று நயன்­தாரா புகழ் பாடு­கி­றார் ஆர்.ஜே.பாலாஜி.

நாகர்­கோ­வி­லில் பெற்­றோர், தாத்தா, மூன்று தங்­கை­க­ளு­டன் குடும்­பத்­தின் மூத்த மக­னா­கப் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொள்­ளும் இளை­ஞன்­தான் இப்­ப­டத்­தின் கதா­நா­ய­கன். அந்­தக் குடும்­பத்­தில் திடீ­ரென்று அம்­மன் வந்து இணைந்­தால் என்ன நடக்­கும் என்­ப­து­தான் கதை­யாம்.

“அந்த கஷ்­டப்­படும் இளை­ஞன் நான்­தான். படப்­பி­டிப்பு துவங்­கும் முன்பு கன்­னி­யா­கு­ம­ரி­யில் உள்ள அத்­தனை கோயில்­க­ளுக்­கும் சென்று சாமி கும்­பிட்ட பிற­கு­தான் திருப்தி அடைந்­தோம்.

“இதில் ஆச்­ச­ரி­யம் என்­ன­வென்­றால் படக்­கு­ழு­வில் உள்ள 200 பேருமே பக்தி சிரத்­தை­யு­டன் இருந்­த­னர். மே 1ஆம் தேதி படத்தை வெளி­யிட வேண்­டும் எனத் திட்­ட­மிட்­டி­ருந்­தோம்.ஆனால் தற்­போ­தைய நிகழ்­வு­கள் அனைத்­துமே நம் வாழ்க்­கை­யோ­டும் வாழ்­வா­தா­ரத்­தோ­டும் சம்­பந்­தப்­பட்ட பெரும் போராட்­டம்.

“எனவே, இந்த உல­கம் எப்­போது பாது­காப்­பா­ன­தாக மாறு­கிறதோ, மக்­கள் எப்­போது பய­மின்றி குடும்­பத்­து­டன் திரை­ய­ரங்­குக்கு வரு­கி­றார்­களோ அப்­போ­து­தான் ‘மூக்­குத்தி அம்­மன்’ வெளி­யா­கும்,” என்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.

‘மூக்­குத்தி அம்­மன்’ முதல் தோற்ற சுவ­ரொட்டி குறித்து பல்­வேறு விமர்சனங்­கள் எழுந்­துள்­ளன. ஆனால், அது­கு­றித்­தெல்­லாம் இவர் அலட்­டிக்­கொள்­வதே இல்­லை­யாம். அனை­வ­ரை­யும் திருப்­தி­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மில்லை என்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!