ஜெயம் ரவி: சாதிக்க விரும்புகிறேன்

ஜெயம் ரவி திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி 17 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன.

இவர் நடித்த ‘ஜெயம்’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழி­க­ளி­லும் பெரிய வெற்­றி­யைப் பெற்­றது. இப்­ப­டத்தை ரவி­யின் அண்­ணன் ராஜா இயக்க, இவர்­க­ளது தந்தை மோகன்­தான் தயா­ரித்­தார்.

தெலுங்குத் திரை­யு­ல­கில் பெரிய தயா­ரிப்­பா­ள­ராக இருந்த மோகன், மகன் ரவி­யி­டம் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழி­களில் எதில் அறி­மு­க­மாக விருப்­பம் என்று கேட்­டா­ராம். தமி­ழில் அறி­மு­க­மாக விரும்­பு­வ­தாக ரவி தெரி­வித்­த­தும் தெலுங்கு சினி­மா­வில் இருந்து மீண்­டும் கோடம்­பாக்­கத்­துக்கு வந்­தா­ராம் மோகன்.

“பல பேர் என் தந்­தையை தெலுங்­கர் என்று நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர் மது­ரை­யில் பிறந்த பச்­சைத் தமி­ழர். அவர் தமி­ழில்­தான் முதல் படத்­தைத் தயா­ரித்­தார். பிற­கு­தான் தெலுங்கு பக்­கம் போனார். அங்கே நல்ல வர­வேற்பு கிடைக்­கவே தொடர்ந்து பல படங்­கள் தயா­ரித்­தார்.

“அண்­ண­னும்­ தனது முதல் படத்தைத் தெலுங்­கில்­தான் இயக்­கி­னார். ஆனால் எனக்கு தமி­ழில் அறி­மு­க­மாகி தொடர்ந்து நடிக்க ஆசை,” என்­கி­றார் ஜெயம் ரவி.

தந்தை தயா­ரிப்­பா­ளர், அண்­ணன் இயக்­கு­நர் என்ற தகு­தியை வைத்­துக்­கொண்டு தாம் நேர­டி­யாக சினி­மா­வில் கால்­ப­திக்­க­வில்லை என்று குறிப்­பி­டும் ரவி, சினி­மா­வுக்­காக தன்­னைப் படிப்­ப­டி­யாக தயார்­ப­டுத்­திக் கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

மும்­பை­யில் நடிப்­புப் பயிற்சி பெற்­றா­ராம். சிறு வய­தில் இருந்தே பர­த­நாட்­டி­யம் கற்­றுத் தேர்ந்­துள்­ளார். ஒரு­பக்­கம் கராத்தே கற்­றுக் கொண்­ட­து­டன் மறு­பக்­கம் தமிழ்ச் சினி­மா­வின் பிர­பல சண்­டைப் பயிற்­சி­யா­ளர்­கள் இரு­வ­ரி­டம் பயிற்சி பெற்­றுள்­ளார்.

“ஒரு தயா­ரிப்­பா­ள­ரின் மக­னாக எந்­த­வித சலு­கை­க­ளை­யும் நான் எதிர்­பார்க்­க­வில்லை. கார­ணம், ஒரே­யொரு படத்­தில் நடித்­தால் போதும் என்று நான் திரை­யு­ல­கத்­துக்கு வர­வில்லை.

“பல படங்­களில் நடிக்­க­வேண்­டும், சினி­மா­வைத் தொழி­லாக ஏற்­க­வேண்­டும் என்ற முடி­வு­டன் வந்­த­வன். அதற்­கான அர்ப்­ப­ணிப்பு இருந்­தால்­தான் வெற்றி பெற முடி­யும். நான் சாதிக்க வேண்­டும் என விரும்­பு­கி­றேன்,” என்­கி­றார் ஜெயம் ரவி.

அண்­மை­யில் இவரை மையப்­ப­டுத்தி ஒரு சர்ச்சை வெளி­யா­னது. நடி­கர் விஜய்­யின் மேலா­ள­ரும் ‘மாஸ்­டர்’ படத்­தின் இணைத் தயா­ரிப்­பா­ள­ரு­மான ஜெக­தீஷ் திடீ­ரென ஜெயம் ரவி­யின் மேலா­ள­ரா­க­வும் பொறுப்­பேற்­றுக் கொண்­டார்.

இது நடி­கர் விஜய்க்கு பிடிக்­க­வில்லை என்­ப­தால் ஜெக­தீஷை பணி­யில் இருந்து நீக்­கி­விட்­டார் என்று ஒரு தக­வல் வெளி­யா­னது. ஆனால் இதில் எந்த சர்ச்­சைக்­கும் இட­மில்லை என்­கி­றார் ஜெயம் ரவி.

“ஜெக­தீஷ் எனக்கு மிக­வும் நெருக்­க­மான நண்­பர். எனது உண்­மை­யான நலன் விரும்பி. பல்­வேறு தரு­ணங்­களில் எனக்கு உத­வி­யி­ருக்­கி­றார். அவர் என்­னு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தால் எந்­தப் பிரச்­சி­னை­யும் எழ­வில்லை,” என்று சொல்­லும் ஜெயம் ரவி இந்தி நடி­கர் சுஷாந்த் சிங் தன் உயிரை மாய்த்­துக்­கொண்­டது தவ­றான முடிவு என்­கி­றார்.

எத்­தனை மன அழுத்­தம் இருந்­தா­லும் அதி­லி­ருந்து நம்­மால் வெளியே வர­மு­டி­யும் என்­றும் எப்­போ­துமே நேர்­ம­றை­யான சிந்­த­னை­யு­டன் செயல்­பட வேண்­டும் என்­றும் கூறு­கி­றார்.

“மேடு பள்­ளங்­கள் இல்­லாத வாழ்க்கை யாருக்­குமே அமை­யாது. நானும் பல தோல்­வி­க­ளைச் சந்­தித்­துள்­ளேன். மன அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளேன். அனை­வ­ருக்­கும் இப்­ப­டிப்­பட்ட அனு­ப­வம் இருக்­கும்.

“அந்­தந்த சூழ்­நி­லை­களை எப்­படி கையாள்­கி­றோம் என்­பதை பொறுத்து தான் நம் வாழ்க்கை அமை­யும்.

“எனவே எதிர்­மறை சிந்­த­னை­கள் வேண்­டாம் என்­பதே எனது தாழ்­மை­யான வேண்­டு­கோள்,” என்­கி­றார் ஜெயம் ரவி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!