100 நாட்கள் திரைகாண விரும்பும் ரசிகர்கள்

‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டைப் பிரம்மாண்டமாகக் கொண்டாட விரும்புகின்றனர் விஜய் ரசிகர்கள். திரையரங்குகளுக்கு மதிப்பு கொடுத்து தனது படத்தை  நேரடியாக இணையத்தில் வெளியிடக்கூடாது என்று முடிவெடுத்துள்ளார் விஜய்.

எனவே, ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடுமளவிற்கு வெற்றி பெறச் செய்யவேண்டும் என ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் ஒரு வாரம் ஓடினாலே போதும். போட்ட முதலீட்டை லாபத்துடன் திரும்ப எடுத்து விடலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்து விட்டனர். 

அதனால் ரஜினி, கமல் என்று யார் நடித்தாலும் 25 நாட்களுக்கு மேல் புதுப் படங்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை. இந்த நிலையை மாற்றி ‘மாஸ்டர்’ படத்தை நூறு நாட்கள்  ஓட வைக்கவேண்டும் என விரும்புகின்றனராம் விஜய் ரசிகர்கள்.