ஆத்மிகா: அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது

இந்த உல­கத்தை மேம்­பட்ட இட­மாக மாற்­று­வதே தனது விருப்­பம் என்­றும் இதற்­கான தமது பங்­க­ளிப்பை வழங்கு­வ­தில் எந்­த­வி­த குறை­யும் வைக்­கப் போவ­தில்லை என்­றும் நடிகை ஆத்­மிகா தெரி­வித்­துள்­ளார்.

முடிந்­த­வரை தம்­மைச் சுற்­றி­யுள்ள அனை­வ­ரை­யும் மகிழ்ச்­சி­யாக வைத்துக்­கொள்ள முயற்­சி செய்யப் போவ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

நடிகை ஆத்­மி­கா­வின் தந்தை ஜூன் 26ஆம் தேதி மார­டைப்­பால் கால­மா­னார். இதை­யொட்டி அவர் தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் தந்­தை­யின் நினை­வு­களை உருக்­க­மா­கப் பதி­விட்­டுள்­ளார்.

“அப்­பா­வின் மறை­வால் ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்தை எதைக் கொண்­டும் நிரப்ப இய­லாது. இத­னால் ஏற்­பட்­டுள்ள வலியை எத­னா­லும் குறைக்க முடி­யாது. எனக்கு எல்­லா­வற்­றை­யும் கற்­றுக் கொடுத்­த­வர், எனக்கு பக்க­பலமாக இருந்­த­வர். என்னை சுதந்தி­ர­மான, வலி­மை­யான பெண்­ணாக வளர்த்­தார். அவர் கற்­றுக்­கொ­டுத்த உயர்­வான விஷ­யங்­களும் அவ­ரது நற்­பண்­பு­களும் என்­னு­டன் எப்­போ­துமே இருக்­கும்,” என்று தெரி­வித்­துள்­ளார் ஆத்­மிகா.

தனது தந்­தை­யின் மர­ணம் திடீ­ரென நிகழ்ந்­த­தால் அதை ஜீர­ணித்­துக்­கொள்ள முடி­ய­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், வாழ்க்­கை­யில் நல்ல நிலையை எட்­டிப் பிடித்து தனது தந்­தைக்கு பெருமை சேர்ப்­பதே இனி தனது இலக்கு என்­றும் கூறி­யுள்­ளார்.

“எப்­போ­துமே பணத்­தை­யும் சொத்­து­க­ளை­யும்­விட கண்­ணி­ய­மும் நேர்­மை­யும்­தான் முக்­கி­யம் என்று அப்பா அடிக்­கடி சொல்­வார். மேலும், சுய­ந­ல­மாக யோசிக்­கா­மல் ஒட்­டு­மொத்த மனி­த­கு­லத்­தின் நன்மை கருதி செயல்­பட வேண்­டும் என்­றும் அறி­வுரை கூறு­வார். அவ­ரது இறுதி தரு­ணத்­தின்­போது வழி­ய­னுப்­பும் பாக்­கி­யம் எனக்­குக் கிடைக்­க­வில்லை.

“இனி வாழ்க்கை எவ்­வ­ளவு கடி­ன­மாக இருந்­தா­லும் என் தந்­தை­யின் நினை­வோடு புன்­ன­கை­யு­டன் எதிர்­கொள்­வேன்.

“என்­னைப் பற்றி யார் என்ன சொன்­னா­லும் கவ­லை­யில்லை. என்­னைப் பற்றி நான் என்ன நினைக்­கி­றேன். என் மீது நான் எந்­த­ளவு நம்­பிக்கை கொண்­டி­ருக்­கி­றேன் என்­ப­து­தான் முக்­கி­யம்,” என்று நெகிழ்வுடன் சொல்கிறார் ஆத்மிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!