இப்படிப்பட்ட வாய்ப்புக்காகக் காத்திருந்தேன்

மாஸ்டர் பட கதாபாத்திரம் பற்றி விஜய்சேதுபதி

‘மாஸ்டர்’ படத்தில் தாம் ஏற்றுள்ள எதிர்மறை கதாபாத்திரம் குறித்து அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் எனும் ஆர்வம் தமக்கு எப்போதுமே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“’மாஸ்டர்’ படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கான கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.

“இது முழுமையான வில்லன் கதாபாத்திரம். அதனால் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்துள்ளேன்.

“இந்த கதாபாத்திரத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்வது என்றால், ‘அவன் துளிகூட நல்லவன் அல்ல’. இப்படிப்பட்ட வாய்ப்புக்காகத்தான் ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் இப்போதுதான் அமைந்திருக்கிறது,” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இதனால் ‘மாஸ்டர்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.