சாய் பல்லவி: நம்பிக்கை குறைந்து வருகிறது

மனித இனத்­தின் மீதான நம்­பிக்கை தமக்கு வேக­மாக குறைந்து வரு­வ­தா­கச் சொல்­கி­றார் சாய் பல்­லவி.

குர­லற்­ற­வர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக கொடுக்­கப்­பட்ட அதி­கா­ரம் தவ­றாகப் பயன்­ப­டுத்­தப்படு­வ­தா­க­வும் இந்நிலை நீடிக்கக் கூடாது என்றும் அவர் தமது அண்­மைய டுவிட்­டர் பதி­வு ஒன்றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

பல­வீ­ன­மா­ன­வர்­கள் காயப்­ப­டுத்­தப் படு­வ­தா­க­வும் சிலர் தங்­க­ளது அரக்­கத்­த­ன­மான ஆசை­களை நிறை­வேற்­றிக்கொள்ள குழந்­தை­க­ளைக் கொல்­வ­தா­க­வும் சாய் பல்­லவி காட்­டத்­து­டன் தெரி­வித்­துள்­ளார்.

“நாம் கடக்­கும் ஒவ்­வொரு நாளும், இயற்கை மனித இனத்­தைச் சுத்­தி­க­ரிக்க எண்­ணு­வ­தா­கவே தோன்­று­கிறது.

“இப்­ப­டிப்­பட்ட நிகழ்­வு­க­ளைப் பார்த்து எது­வும் செய்ய இய­லாத பய­னற்ற, மோச­மான வாழ்வை வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம். நாம் வாழும் இந்த மனி­தத்­தன்­மை­யற்ற உல­கம் இன்­னொரு குழந்­தை­யின் பிறப்­புக்­குத் தகு­தி­யா­னது அல்ல.

“ஊடக வெளிச்­சத்­துக்கு வரும் குற்­றங்­க­ளுக்­கும்கூட சமூக வலைத்­த­ளத்­தில் ‘டிரெண்ட்’ செய்­தால் மட்­டுமே குற்­றங்­க­ளுக்கு நீதி கிடைக்­கும் என்ற நிலை வரக்­கூ­டாது,” என்று சாய் பல்­லவி கூறி­யுள்­ளார்.

நிலைமை இவ்­வாறு இருந்­தால் புகார் அளிக்­கப்­ப­டா­மல், கவ­னிக்­கப்­ப­டா­மல் போகும் குற்­றங்­க­ளின் கதி என்ன ஆகும்? என்­றும் அவர் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தின் புதுக்கோட்டை பகுதியில் நிகழ்ந்துள்ள அண்மைய பாலியல் குற்றம் தொடர்பாக சாய் பல்லவி உட்பட தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த மேலும் பலர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!