“சினிமாவில் நடிப்பதே சிறு வயது ஆசை’

“சிறு வயதில் அப்பா பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்வதுதான் முக்கியமான பொழுதுபோக்காக இருந்தது. மேலும் அப்பாவின் பாடல்களை அவை வெளியாகும் முன்பே கேட்பதில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும்,” என்கிறார் காலஞ்சென்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன்.

தற்போது நியூசிலாந்தில் இருக்கும் அவர் அண்மையில் தனது தந்தையின் பிறந்தநாளையொட்டி சிறப்பு காணொளித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு திரைப் பிரமுகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் தமது சிறுவயது நினைவுகளையும் சினிமா அனுபவங்களையும் விவரித்துள்ளார் யுகேந்திரன்.

சினிமா நடிகராக வேண்டும் என்பதுதான் இவரது சிறுவயது ஆசையாம். தந்தை பிரபல சினிமா பாடகராக இருந்தாலும் இவரது சினிமா பிரவேசம் எளிதாக நடந்துவிடவில்லையாம்.

“நானும் வெங்கட் பிரபுவும் இணைந்து ‘பூஞ்சோலை’ என்ற படத்தில் நடித்தோம். ஆனால் அப்படம் வெளியாகவே இல்லை. அதன்பிறகு வெங்கட்பிரபுவுடன் நானும் எஸ்.பி.பி. சரணும் இணைந்து அகத்தியன் சார் இயக்கத்தில் ‘காதல் சாம்ராஜ்யம்’ படத்தில் நடித்து அதுவும் திரைகாணாமல் போனது.

“இத்தனைக்கும் அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. சுப்பு பஞ்சு அண்ணாதான் தயாரிப்பாளர். எப்போது அவரைப் பார்த்தாலும் இந்தப் படத்தை எப்படியாவது வெளியிடுங்கள் என்று கேட்பேன். இன்றைய தேதிக்கும் ஒத்துவரும் கதைக்களத்துடன் உருவான நல்ல படம் அது,” என்று கூறியுள்ளார் யுகேந்திரன்.

‘சென்னை-28’ படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளை வெங்கட் பிரபுவுடன் இணைந்து மேற்கொண்டவர்களில் இவரும் ஒருவர். அப்படத்தில் நடிக்கும் நடிகர்களைத் தேர்வு செய்தவர்களில் யுகேந்திரனும் இடம்பெற்றிருந்தார். நடிகர் ஜெய் அப்படத்தில் நடிக்க சிபாரிசு செய்ததும் இவர்தானாம்.

“அப்போது ‘பகவதி’ படத்தில் ஜெய்யும் என்னுடன் நடித்திருந்தார். அப்போது பார்ப்பதற்கு விஜய் போன்றே தோற்றமளிப்பார். ஆனால் படப்பிடிப்புக்கு முன்பு சின்ன கருத்து வேறுபாடு காரணமாக நான் விலகிவிட்டேன்.

“அதன்பிறகு வெங்கட்பிரபு படங்களில் நான் நடிப்பதாக இருக்கும். ஆனால், கடைசி நேரத்தில் ஏதேனும் ஒரு காரணத்தால் அது சாத்தியமாகாமல் போய்விடும்,” என்று வருத்தப்படுகிறார் யுகேந்திரன்.
தற்போது வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் இம்முறையும் கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்கிறார்.

“திரையுலகம் எப்படிப்பட்டது என்பது எனக்கும் ஓரளவு தெரியும். வெங்கட்பிரபுவுக்கு என்னை நடிக்க வைக்கவேண்டும் என்று ஆசை இருந்தாலும் சுற்றியிருப்பவர்கள் ஏதாவது சொல்வார்கள். அதனால்தான் எனக்கான வாய்ப்புகள் நழுவிப்போகின்றன,” என்றார் யுகேந்திரன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!