விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணையும் ‘அக்னிச் சிறகுகள்’

‘மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னிச் சிறகுகள்’. இது அதிரடியும் அடிதடியும் நிறைந்த திகில் கதையை மையமாக வைத்து உருவாகிறது. அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சென்ராயன் ‘டாக்சி தல’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றுவாராம். முதற்கட்ட படப்பிடிப்பை கஜகஸ்தானில் நடத்தி முடித்துள்ளனர். கொரோனா விவகாரம் பெரிதாகிவிட்டதால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் சிறப்பு அரங்குகள் அமைத்து நடத்த இருப்பதாகத் தகவல். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.