இயக்குநராகும் நாயகிகள்

பல்வேறு புது முயற்சிகளில் ஈடுபடக்கூடிய ஆர்வத்தைத் திரைக்கலைஞர்களிடம் ஏற்படுத்தி உள்ளது கொரோனா ஊரடங்கு. முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் இப்போது சமூக வலைத்தளங்களில்தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

சில மூத்த கலைஞர்கள் யூடியூப் தளத்தில் தங்களுக்கென தனிப்பட்ட சேனல் துவங்கி பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். நடனப் பயிற்சி, நடிப்புப் பயிற்சி, சமையல் செய்வது, யோகா செய்வது, உடற்பயிற்சி, சமூக சேவை என பல விஷயங்களில் திரை உலகப் பிரபலங்கள் கவனம் செலுத்துகின்றனர்.

இந்நிலையில் முன்னணி நடிகைகள் மூவர் இயக்குநர்களாக அவதாரம் எடுப்பதற்கான வாய்ப்புள்ளதாக கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கிசுகிசுக்கிறார்கள்.

நடிகைகள் நித்யா மேனன், ரம்யா நம்பீசன், ‘பூ’ பட நாயகி பார்வதி ஆகிய மூவருக்கும் இயக்குநராகும் ஆசை உள்ளது. முந்தைய பேட்டிகளில் தங்களின் இந்த விருப்பத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரம்யா நம்பீசனைப் பொறுத்தவரை ஏற்கெனவே நடிப்பு, பின்னணிக் குரல் கொடுப்பது, தனிப்பாடல்கள் பாடுவது என தொடர்ந்து அசத்தி வருகிறார். இயக்குநராக வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு மிக விரைவாக நிறைவேறி உள்ளது.

அண்மையில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அதற்கு இணையம் வழி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். முதல் அனுபவமே திருப்திகரமாக அமைந்ததால் திரைப்பட இயக்குநராவதற்கான அடுத்தகட்ட நகர்வுகளுக்கு திட்டமிட்டுக்கொண்டி ருக்கிறாராம்.

‘பூ’ பார்வதி இயல்பாகவே தைரியசாலி. சமூக நலன் சார்ந்த விஷயங்களில் நாட்டம் உள்ளவர். அவ்வப்போது சர்ச்சைக்குரிய நிகழ்வுகள், அநீதிகள் குறித்து தயக்கமின்றி தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.

எனவே, இவர் இயக்கும் திரைப்படம் அத்தகைய சர்ச்சைகளை, பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்வதியும் இதை ஆமோதித்துள்ளார்.

அதேசமயம் நாளையே ஒரு படத்தை இயக்கவேண்டும் என இவர் அவசரப்படவில்லையாம். திரையுலகப் பணி என்பது ஒரு சிலர் நினைப்பதுபோல் சாதாரண வேலை அல்ல என சுட்டிக் காட்டுகிறார்.

“திரைப்படம் இயக்க முன் அனுபவமும் அதைவிட அதிகமாக அர்ப்பணிப்பு உணர்வும் தேவை. 24 மணி நேரமும் படம் குறித்து மட்டுமே யோசிக்கவேண்டும். எப்போது என்னால் நூறு விழுக்காட்டுக்கு மேல் அர்ப்பணிப்புடன் உழைக்க முடியும் எனத் தோன்றுகிறதோ அப்போதுதான் களமிறங்குவேன்,” என்கிறார் பார்வதி.

என்னதான் இப்படிப் பக்குவமாகப் பேசினாலும் இந்த ஊரடங்கு வேளையில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் இரண்டு கதைகளைத் தயார் செய்துள்ளாராம். அவற்றுக்கேற்ற கதாநாயகன்கள் யார் என்பதையும் தீர்மானித்துவிட்டாராம்.

“உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் சில திட்டங்கள் வைத்துள்ளேன். ஒருவேளை நான் எதிர்பார்க்கும் நாயகர்கள் கால்ஷீட் கொடுத்தால் எனது எதிர்பார்ப்புக்கேற்ப சூழ்நிலையும் அமைந்தால் நான் தயார் செய்து வைத்துள்ள கதைகளில் ஒன்றை உடனடியாகப் படமாக்கும் வாய்ப்பும் உண்டு,” என்று புதிர் போடுகிறார் பார்வதி.

நித்யாமேனனைப் பொறுத்தவரை தாம் இயக்குநராவதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அடித்துச் சொல்கிறார். அதேசமயம் பெண் இயக்குநர்களில் வித்தியாசமான, மாறுபட்ட இயக்குநர் என்று பெயரெடுப்பதே தமது லட்சியம் என்கிறார்.

பொதுவாக பெண் இயக்குநர்கள் மென்மையான காதல் கதைகளை, குடும்ப சிக்கல்களை மட்டுமே அலசுவார்கள் என்று பெயரெடுக்க நித்யா மேனன் விரும்பவில்லை.

“பெண் இயக்குநர்கள் குறித்த இந்த மதிப்பீட்டை மாற்ற விரும்புகிறேன். எனவே, காதல் தவிர்த்து, தேவைப்பட்டால் அதையும் ஓர் அங்கமாக வைத்து அதிரடிப் படம் ஒன்றை உருவாக்க விரும்புகிறேன். இதற்கான கதையை உருவாக்கும் பணியை மனதளவில் எப்போதோ துவங்கி விட்டேன். கதை எழுதி முடித்த பிறகே அதை இயக்குவது குறித்து யோசிப்பேன்,” என்கிறார் நித்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!