ஊதியத்தை உயர்த்திய நாயகிகள்

சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக திரையுலகம் முடங்கிக் கிடப்பதால் திரைப்படத் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

மற்றொரு பக்கம் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தும் படத்தை வெளியிட முடியாமல் கடும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்த, அதை ஏற்று விஜய் ஆன்டணி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களும் சில நடிகைகளும் ஊதியத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்தனர்.

எனினும் சிலர் மட்டும் இதற்கு உடன்படவில்லையாம். மாறாக வழக்கத்தைவிட கூடுதல் தொகை கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

நடிகைகள் சாய்பல்லவி, ரகுல் பிரீத் சிங், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் சற்றேறக்குறைய ரூ.75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாயை குறைந்தபட்ச சம்பளமாகவும் அதிகபட்சம் ஒன்றரை கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் கேட்கிறார்களாம். இத்தொகையை கேட்டு தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு, மூன்றாம் வரிசைகளில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், வாணி போஜன், இந்துஜா, மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன் ஆகியோர் 55 லட்சம் வரை ஊதியம் கேட்கிறார்களாம். எனினும் இந்தளவு ஊதியம் தரவும் தயாரிப்பாளர்கள் பலர் முன்வரவில்லை எனத் தெரிகிறது.

ஊரடங்கு முடிந்ததும் படத் தயாரிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதால் நடிகைகள் பலர் வாய்ப்பை பயன்படுத்தி சம்பளத்தை உயர்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

“சம்பளத்துக்காகவே சில கோடிகளை முதலீடு செய்யவேண்டி இருக்கிறது. அதன்பிறகு படப்பிடிப்பு செலவு, தொழில்நுட்ப பணிகளுக்கான செலவு ஆகியவையும் பெரும் பாரமாக அழுத்துகின்றன. எனவே, திரைப்படக் கலைஞர்கள் சம்பளத்தைக் குறைக்கவேண்டும்.

“இல்லையெனில் படம் வெளியீடு காணும் சமயத்தில்தான் சம்பளம் கொடுக்க முடியும். எல்லா செலவுகளையும் செய்து முடித்தும், தயாரித்த படத்தைக் குறித்த நேரத்தில் வெளியிட முடியவில்லை என்றால் தயாரிப்பாளருக்குத்தான் பெரும் சிக்கல். எனவே, நடிகர், நடிகைகளும் சிரமங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்,” என்கிறது தயாரிப்பு தரப்பு.

இந்நிலையில் சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதாக சில நடிகைகள் அறிவித்துள்ளனர்.

இது கறாராக சம்பளம் கேட்கும் இதர நாயகிகளை எரிச்சலடைய வைத்துள்ளது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!