ஆன்ட்ரியாவின் அழகு ரகசியம்

ஆரஞ்சு பழத்தை சக்கையாகப் பிழிந்து அதன் சாற்றையும் தோலையும் கொண்டு தமது முக அழகைப் பராமரிக்கிறாராம் ஆன்ட்ரியா.

வாரத்துக்கு மூன்று முறையாவது இவ்வாறு செய்வது தன் வழக்கம் என அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“ஊரடங்கின்போது உடற்பயிற்சியிலும் அழகு பராமரிப்பிலும் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளேன். இதுகுறித்து பல விவரங்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

“விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த அனுபவம் இனிமையானது. அதேபோல் காட்டுப்பகுதியில் நடக்கும் கதையைக் கொண்டு உருவான ‘கா’ படத்தின் வெளியீட்டையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்கிறார் ஆன்ட்ரியா.

இதற்கிடையே முகப்பொலிவை அதிகரிக்கவும் பராமரிக்கவும் என்னென்ன செய்யவேண்டும் என்பதை விவரிக்கும் வகையில் சில புகைப்படங்களையும் காணொளிப்பதிவுகளையும் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம். ஆன்ட்ரியாவின் இந்த முடிவை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.