ஜீவாவின் சகோதரர் தயாரிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’

ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவாவின் மூத்த சகோதரர் ‘ஜித்தன்’ ரமேஷ், சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார். ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கபடி வீரர்களாக நடிக்கின்றனர். “கதைப்படி சிறுவயது முதலே இருவரும் நண்பர்கள். இருப்பினும் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். காரைக்குடி பகுதியின் பின்னணியில் கதை நடைபெறுகிறது,” என்கிறார் ராஜசேகர். , :  