என்னை மிரட்டுகிறார்கள்: வனிதா கோபம்

நடிகை லட்­சுமி ராம­கி­ருஷ்­ணன் தேவை­யின்றி தனது தனிப்­பட்ட வாழ்க்­கை­யில் தலை­யிட்டு குழப்­பம் ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­தாக வனிதா விஜ­ய­கு­மார் மீண்­டும் சாடி­யுள்­ளார்.

தமது விவ­கா­ரத்­தில் போலி நீதிப­தி­யாக இருக்­க­வும் லட்­சுமி முயற்சி செய்­வ­தாக தமது டுவிட்­டர் பக்கத்­தில் வனிதா குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே நடிகை கஸ்­தூ­ரி­யும் தற்­போது வனி­தா­வுக்கு எதி­ரா­கக் கள­மி­றங்கி உள்­ளார். மேலும் லட்­சுமி ராம­கி­ருஷ்­ண­னுக்­கும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளார்.

“ஒரு குடும்­பத்­திற்கு உதவி செய்­வது போன்று, தேவை­யில்­லா­மல் என் தனிப்­பட்ட வாழ்க்­கை­யில் தலை­யிட்டு, போலி நீதி­ப­தி­யாக இருக்­க­வும் ஒரு சமூக ஆர்­வ­லர் (லட்­சுமி ராம­கி­ருஷ்­ணன்) முயற்சி செய்­கி­றார். அவர் அப்­பா­வி­க­ளின் ரத்­தத்தை குடிக்­கி­றார்.

“நல்ல மன­துள்ள அந்த சமூக ஆர்­வ­லர் தன் வழக்­க­றி­ஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்­டு­வதை பாருங்­கள். இது தொடர்­பாக என் தரப்பு வழக்­க­றி­ஞர் அவ­ருக்கு நோட்­டீஸ் அனுப்ப உள்­ளார். எல்­லா­வற்­றை­யும் சட்­டப்­படி எதிர்­கொள்­வேன்,” என வனிதா விஜ­ய­கு­மார் தமது பதி­வில் கூறி­உள்­ளார்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!