அனைத்துலக நண்பர் தினத்தில் தனு‌ஷை வாழ்த்திய வடிவேலு

அண்மையில் பிறந்­த­நாள் கொண்­டா­டிய தனு­ஷுக்கு, வடி­வேலு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தமிழ் சினி­மா் மீது காதல்­கொண்டு, புதுப்­பேட்­டை­யில் படிக்­கா­த­வ­னாய் வலம் வந்து, வேலை­யில்லா பட்­ட­தா­ரி­யாய் கொடி நாட்டி, வட­சென்­னை­யில் நீ அசு­ர­னாய் மாறி­ய­போது, நம் மக்­க­ளைப்­போல் நானும் மகிழ்ந்­தேன். இந்த ஜகத்­தி­னில், நீ கர்­ண­னாய் தோன்ற வாழ்த்­து­கி­றேன்..”

- இப்­படி தனுஷ் நடித்த பல வெற்­றிப் படங்­க­ளின் தலைப்­பு­களை வைத்தே வாழ்த்­தி­னார் வடி­வேலு.

இது பலரை வியக்க வைத்தது. காரணம் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு.

தனுஷ் முன்னணி நடிகரான பிற­கும் கூட தனது தந்தை கஸ்தூரி ராஜாவால் சினிமாவில் அறிமுகமான வடிவேலுடன் இணைந்து நடிக்­கவில்லை.

வடி­வே­லு­வுக்­கா­கவே திரைக்­கதை­யில் நகைச்­சு­வைக் காட்­சி­களை அதி­க­மாக இடம்­பெ­றச் செய்­ப­வர் இயக்­கு­நர் சுராஜ். ‘தலை­ந­க­ரம்’, ‘மரு­த­மலை’ உள்­ளிட்ட சில படங்­களை அதற்கு உதா­ர­ண­மா­கச் சொல்­ல­லாம்.

அப்­ப­டித்­தான் தனுஷை வைத்து எடுத்த ‘படிக்­கா­த­வன்’ படத்திலும் வடி­வேலுவுக்கான காட்சிகளை சேர்த்­தி­ருந்­தார். ஆனால் தனுஷுக்கும் வடி­வே­லுவுக்­கும் திடீ­ரென முட்­டிக் கொண்­டது என்­கி­றார் கோடம்­பாக்க மூத்த செய்­தி­யா­ளர் ஒரு­வர்.

“படப்­பி­டிப்­பின்­போது வடி­வே­லு­வி­டம் பேசிய தனுஷ், “அண்ணே, படத்­துல நான் நாய­கன். ஆனால் நகைச்­சு­வை­யில் நீங்க என்னை தூக்­கிச் சாப்­பிட்­டு­ரு­வீங்க. அத­னால் முன்பே எழு­தப்­பட்ட வச­னத்தை மட்­டும் பேசுங்க. கூடு­த­லாக ஏதும் பேசு­வ­தாக இருந்­தால் முன்­கூட்­டியே தெரி­யப்­ப­டுத்­துங்­கள். நானும் அதற்­குத் தயா­ராகி உங்­க­ளுக்கு பதி­லடி தருகிற வச­னங்­க­ளைப் பேசு­கி­றேன் என கேட்­டுக்­கொண்­டார்.

“ஆனால் வடி­வேலு இதற்கு ஒப்­புக்­கொள்­ள­வில்லை.

“நான் உங்­கள் மாமா­வு­டன் (ரஜினி) நடிக்­கும்­போ­து­கூட கேமரா ஓடத்­தொ­டங்­கி­ய­தும் ஏதா­வது நல்ல வச­னம் தோன்­றி­னால் பேசி­டு­வேன். அது­தான் எனது தனித்­து­வம். அதை எப்­படி விட்­டுக்­கொ­டுக்க முடி­யும்? என்று கேட்­டார்.

“முன்பு ‘தலை­ந­க­ரம்’ படத்­தில் ரவுடி என்ற பெய­ரில் வலி­யப்­போய் போலிஸ் வாக­னத்­தில் ஏறும் வடி­வேலு, “நல்லா பார்த்­துக்­குங்க... நான் ஜெயி­லுக்­குப் போறேன், ஜெயி­லுக்­குப் போறேன்’ எனச் சொல்­லி­யி­ருப்­பார். அது மக்­க­ளால் ரசிக்­கப்­ப­ட்டது.

“உண்­மை­யில் அப்­ப­டி­யொரு வச­னம் எழு­தப்­ப­ட­வில்லை. ‘டப்­பிங் பேசும்­போது சேர்த்­துக் கொள்­ள­லாம்’ என முடிவு செய்து சும்மா வெறும் வாயை அசைத்­தார் வடிவேலு. பிற­கு­தான் ‘ஜெயி­லுக்­குப் போறேன்’ வச­னம் சேர்க்­க­ப்பட்­டது.

“இப்­படி கேமரா ஓடத்­து­வங்­கிய பின்­பு­கூட புது வச­னத்­தைப் பேசு­வது வழக்­கம். இதைத்­தான் வடி­வேலு சொன்­னார். ஆனால் தனுஷ் அதை ஏற்­க­வில்லை. இத­னால் ‘படிக்­கா­த­வன்’ படத்­தி­லி­ருந்து வடி­வேலு விலக, விவேக் நடிக்க வைக்­கப்­பட்­டார்.

“இப்­போ­தும் ‘படிக்­கா­த­வன்’ படத்­தின் விவேக் காமெடி காட்­சி­க­ளைப் பார்த்­தால் அதில் வடி­வேலு வசன பாணி இருப்­பதை உண­ர­லாம். இந்த பிரச்­சி­னைக்­குப் பின் இரு­வ­ரும் இணை­ய­வில்லை,” என்­கி­றார் அந்த மூத்த செய்­தி­யா­ளர்.

இதோ, உல­கம் அனைத்­து­லக நண்­பர்­கள் தின வாழ்த்தை பரி­மா­றிக் கொண்ட வேளை­யில், தனு­ஷு­ட­னான பகையை மறந்து, வாழ்த்தி இருக்­கி­றார் வடி­வேலு.

பகையை ஆற்­றும் வலிமை நட்­புக்கு உண்டு என்­பார்­கள். அது உண்­மை­யா­கட்­டும் என்­பதே இரு­த­ரப்பு ரசி­கர்­க­ளின் விருப்­பம்.