திகைக்க வைத்த சேதுபதி

ஊர­டங்­கின்­போ­தும் தன் வீட்­டுக்கு அருகே உள்ள தனிப்­பட்ட அலு­வ­ல­கத்­துக்கு வாய்ப்­புக் கிடைக்­கும் போதெல்­லாம் வந்து போகி­றார் விஜய் சேது­பதி.

ஊர­டங்கு முடி­வுக்கு வந்த அடுத்த நாளே படப்­பி­டிப்­பில் பங்­கேற்க காத்­துக் கிடப்­ப­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

தற்­போது குறைந்­த­பட்­சம் ஐந்து படங்­களில் அவர் கவ­னம் செலுத்­தி­வ­ரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அவற்­றுள் ‘துக்­ளக் தர்­பார்’ பட­மும் ஒன்று. தலைப்­பைப் போலவே இதன் கதை­யும் சுவா­ர­சி­ய­மாக இருக்­கு­மாம்.

அர­சி­யல் கலந்த சரித்­தி­ரத்­தைக் கொண்ட ஒரு­வரை முன்­வைத்து சொல்­லப்­படும் கதை இது என்­கி­றார் இயக்­கு­நர் டெல்லி பிர­சாத் தீன­த­யா­ளன். இதில் தாம் ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ர­மா­கவே விஜய் சேது­பதி வாழ்ந்து காட்டி­ இ­ருப்­ப­தா­க­வும் பாராட்­டு­கி­றார்.

“பொது­வாக மன­சுக்­குள் ஒரு கதை உரு­வா­கத் தொடங்­கி­ய­துமே அதற்­குத் தேவை­யான சில கற்­பனை முகங்­கள் மன­தில் பூக்­கும். அப்­படி என் மன­தில் மலர்ந்த ஒரே முகம் விஜய் சேது­ப­தி­தான். இந்­தக் கதைக்­கான கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­பது அவ்­வ­ளவு எளிதல்ல. எல்­லோ­ரா­லும் நடித்­து­விட முடி­யாது. இதை உணர்ந்­தி­ருந்­தும் விஜய் சேது­பதி இருக்­கி­றார் என்ற நம்­பிக்­கை­யில் கதையை எழுதி முடித்­தேன்.

“எந்­த­வொரு நடி­க­ராக இருந்­தா­லும் இதில் நான் நடித்தே ஆக­வேண்­டும் என்று விரும்­பக்­கூ­டிய கதா­பாத்­தி­ரம் இது. நான் எதிர்­பார்த்­தது போலவே சேது­பதி இதில் நடிக்க ஒப்­புக்­கொண்­டார்,” என்­கி­றார் டெல்லி பிர­சாத் தீன­த­யா­ளன்.

ஒரு கதை­யில் இருக்­கும் சிர­ம­மான அம்­சங்­க­ளைக்­கூட மகிழ்ச்சியான அம்­சங்­க­ளாக மாற்­றக்­கூ­டிய ஆற்­றல் சேது­ப­திக்கு உண்டு என்று குறிப்­பி­டு­ப­வர், ரசித்து நடிப்­ப­தால் வரக்­கூ­டிய மனோ­பா­வம் இது என்­கி­றார்.

சிர­மங்­களை ரசித்­த­ப­டியே அனு­ப­விப்­ப­து­தான் சேது­ப­தி­யி­டம் இயக்­கு­நர்­க­ளுக்­குப் பிடித்த அம்­சம் என்­றும் இந்­தப் படம் அவ­ரது திரை­வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான படைப்­பாக இருக்­கும் என்­றும் பிர­சாத் உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார்.

இது அர­சி­ய­லும் நையாண்­டி­யும் அதி­க­முள்ள கதை­யாம். ஓரிரு ஆண்­டு­க­ளுக்கு முன்பே விஜய் சேது­ப­தி­யி­டம் இதை சொல்­லி­யி­ருக்­கி­றார். கதை கேட்டு முடித்­த­தும் “டெல்லி இதை அப்­ப­டியே வைத்­திரு. நிச்­ச­யம் வரு­கி­றேன்” என்­றா­ராம் சேது­பதி. அதன்­பி­றகு கால்­ஷீட் ஒதுக்­கும்­வரை அவ்­வப்­போது தொடர்­பு­கொண்டு நலம் விசா­ரிப்­பா­ராம்.

ஓர் இளம் அர­சி­யல்­வாதி எப்­ப­டி­யா­வது முன்­னுக்கு வந்­து­விட வேண்­டும் என்­றும் வெகு விரை­வாக அர­சி­யல் களத்­தில் சாதிக்­க­வேண்­டும் என்­றும் நினைக்­கி­றான். குறு­கிய கால இலக்கு என்­ப­தால் அதற்­குத் தேவைப்­படும் துரோ­கங்­கள், சிறு­சிறு வஞ்­ச­கங்­கள், காலை வாரி­வி­டு­தல் என எதற்­கும் அவன் அஞ்­சு­வ­தில்லை. இது­ தொடர்பான அடுத்­த­டுத்த சம்­ப­வங்­க­ளு­டன் கதை திரை­யில் விரி­யும் என்­கி­றார் இயக்கு­நர்.

“சில­ருக்கு மட்­டுமே இந்த உண்மை தெரிந்­தி­ருக்­கும். சேது­பதி நல்ல எழுத்­தா­ளர். கமல் சார் மாதி­ரி­யான ஒரு­வர் அமர்ந்­துள்ள இடத்­துக்கு அருகே செல்­லக்­கூ­டிய தகுதி உடை­ய­வர். அனு­ப­வம் கூடும்­போது அவரது திறமை மேலும் அழகாக வெளிப்­படும். இந்­தப் படத்­தின் இடை­வே­ளை­யின்­போது சேது மட்­டுமே இடம்­பெ­றும் ஒன்­பது நிமி­டக் காட்சி உள்­ளது. கிட்­டத்­தட்ட நாட­கம் போன்ற அமைப்­பு­தான். ஆனால், ஒற்றை ஆளாக நின்று கள­மாட வேண்­டும்.

“இவ்­வ­ளவு சிர­ம­மான களத்­தில் அவர் தன் நடிப்பை வெளிப்­படுத்­திய விதம் மிரள வைத்­தது. மொத்­தப் படக்­கு­ழு­வும் திகைத்­துப் போனது. சேது இந்­தக் காட்­சி­யில் விஸ்­வரூபம் எடுத்­தி­ருக்­கிறார். நாங்கள் அனை­வ­ரும் அசந்து ­நிற்க, அந்தக் காட்­சியை கட் சொல்லி முடித்து வைத்­த­தும் அவர்­தான். படம் வெளி­யான பிறகு மீண்­டும் பேசு­வேன்,” என்­கி­றார் டெல்லி பிரசாத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!