இந்தி இணையத் தொடரில் பிரியா

சத்­த­மில்­லா­மல் ஒரு இந்தி இணை­யத் தொட­ரில் நடித்­துள்­ளார் பிரியா ஆனந்த். அது­மட்­டு­மல்ல முதன்­மு­றை­யாக இந்தியில் பின்­ன­ணிக் குர­லும் கொடுத்தி­ருக்­கி­றா­ராம்.

இத­னால் மனம் நிறைந்த உற்­சாகத்­து­ட­னும் மகிழ்ச்­சி­யு­ட­னும் தமது சமூக வலைத்­தளப் பக்­கங்­களில் தொடர்ந்து பல விஷ­யங்­க­ளைப் பதி­விட்டு வரு­கி­றார். இந்த உற்­சா­கம் ரசி­கர்­க­ளை­யும் தொற்­றிக்­கொண்­டுள்­ளது.

‘சிம்­பிள் மர்­டர்’ என்ற இணை­யத் தொட­ரில் முக­மட் அயூப், சச்­சின், பதக், முகேஷ் சப்ரா, அயஸ்­கான் உள்­ளிட்­டோர் பிரி­யா­வு­டன் இணைந்து நடித்­துள்­ள­னர். கடை­சி­யாக தமி­ழில் விக்­ரம் மகன் துருவ்­வு­டன் ‘ஆதித்ய வர்மா’வில் நடித்­தி­ருந்­தார் பிரியா. அதன்­பி­றகு தமி­ழில் அவ­ருக்கு நிறைய வாய்ப்­பு­கள் கிடைக்­கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால், ‘ஆதித்ய வர்மா’ எதிர்­பார்த்த வெற்­றி­யைப் பெற­வில்லை. இத­னால் பிரி­யா­வுக்­கும் ஏமாற்­றமே மிஞ்சி­யது. இந்­நி­லை­யில் ‘சிம்­பிள் மர்­டர்’ வாய்ப்பு தேடி­வர, எந்­த­வி­தத் தயக்­கமும் இன்றி ஒப்­புக் கொண்­டா­ராம்.

“படப்­பி­டிப்பு தொடங்கி மூன்று வாரங்­க­ளுக்­குப் பிறகே சமூக வலைத்­தளப் பக்­கத்­தில் பதி­வி­டு­கி­றேன். கடந்த மூன்று வார­மும் உற்­சா­க­மா­கக் கழிந்­தது. முதன்­மு­றை­யாக மின்­னி­லக்­கத் தளத்­தில் கால்­ப­தித்­துள்­ளேன்.

“அது­மட்­டு­மல்ல, முதன்­மு­றை­யாக இந்­தி­யில் சொந்­தக் குர­லில் வச­னங்­க­ளைப் பேசி­யி­ருப்­பது இரட்­டிப்பு மகிழ்ச்­சியை அளிக்­கிறது. தொடர்ந்து இது­போன்ற வாய்ப்­பு­கள் கிடைத்­தால் எனது திரைப்­ப­ய­ணம் மேலும் சிறப்­பாக அமை­யும்,” என்று தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார் பிரியா.

ஊர­டங்கு வேளை என்­ப­தால் அரசு அறி­வு­றுத்தி உள்ள அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்டு படப்­பி­டிப்பு நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர் தெளி­வு­படுத்தி உள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றின் தாக்­கம் அதி­க­மி­ருப்­ப­தால் நான் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என ரசி­கர்­கள் அறி­வுரை கூறி­யுள்­ள­னர். இந்த அன்பு நெகிழ வைக்­கிறது,” என்கிறார் பிரியா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon