‘ரசிகர்கள்தான் முக்கியம்’

நட்­சத்­திர நாய­கி­யாக உரு­வா­க­வேண்­டும் என்­னும் ஆசை தமக்கு அறவே இல்லை என்­கி­றார் நந்­திதா ஸ்வேதா.

ரசி­கர்­க­ளைத் திருப்­தி­ப­டுத்­தும் கதை­களில் நடிக்­க­வேண்­டும் என்­பது மட்­டுமே இது­வரை தமது இலக்­காக இருந்து வந்­துள்­ளது என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“என்­னைப் பொறுத்­த­வரை ரசி­கர்­க­ளுக்­குத்­தான் முன்­னு­ரிமை. ஏனெ­னில் ஒரு திரைப்­ப­டம் வெற்றி காண்­ப­தும் தோல்வி அடை­வ­தும் ரசி­கர்­க­ளின் கையில்­தான் உள்­ளது. படம் ஓடி­னால்­தான் நான் பெரிய நட்­சத்­தி­ரம். இல்­லை­யென்­றால் அடுத்த வாய்ப்­புக்­கா­கக் காத்­தி­ருக்க வேண்­டும்.

“ஒரு நடி­கை­யாக தர­மான படங்­களில் நடித்து அடுத்­த­டுத்த கட்­டங்­களை எட்­டிப் பிடிக்க வேண்­டும் என விரும்­பு­கி­றேன். ஒரு கதை­யைக் கேட்­கும்­போதே நமக்கு அதில் நடிக்­க­வேண்­டும் எனும் உணர்வு ஏற்­பட வேண்­டும்.

“மன­துக்­குப் பிடித்த கதை­யாக அமைந்து, அந்­தப் படத்­தைத் திரை­ய­ரங்­கில் கண்டு ரசிக்க ரசி­கர்­கள் மீண்­டும் வரு­வார்­கள் என்று நம்­பிக்கை அளிக்­கும் கதை­க­ளில்­தான் நடிக்க விரும்­பு­கி­றேன். இது­வ­ரை­யில் கூடு­மா­ன­வரை அப்­ப­டிப்­பட்ட கதை­க­ளையே தேர்வு செய்­தி­ருப்­ப­தாக நம்­பு­கி­றேன்,” என்­கி­றார் நந்­திதா.

இது­வரை திகில், நகைச்­சுவை நிறைந்த படங்­களில் நடித்­தி­ருப்­ப­வர், கிரா­மத்­துப் பெண்­ணா­க­வும் நிறைய நடித்­தாகி விட்­டது என்­கி­றார்.

ஒரே ஒரு படத்­தி­லா­வது அம்­மன் வேடத்­தில் நடிக்­க­வேண்­டும் என விரும்­பு­கி­றா­ராம்.

தமி­ழில் பக்­திப் படங்­கள் வெளி­வந்து நீண்ட நாட்­க­ளாகி விட்­ட­தாக சுட்­டிக்­காட்­டு­ப­வர், இவ்­வாறு நீண்ட இடை­வெளி இருக்­கும்­போது அத்­த­கைய படங்­கள் வந்­தால் நிச்­ச­யம் வெற்றி பெறும் என்­கி­றார்.

நந்­தி­தா­வைப் பற்றி கிசு­கி­சுக்­கள் அதி­கம் வந்­த­தில்லை. விருந்து, கேளிக்கை நிகழ்­வு­கள் எல்­லாம் இவ­ருக்கு அறவே பிடிக்­கா­தாம். அத்­த­கைய நிகழ்­வு­களில் ஒலிக்­கும் இசை­யின் இரைச்­ச­லும் பங்­கேற்­கும் பெரும் கூட்­ட­மும் தமக்கு ஒத்­து­வ­ராது என்­கி­றார்.

“என் தோழி­கள் பலர் விருந்து நிகழ்­வு­க­ளுக்கு என்னை அழைத்­துள்­ள­னர். ஆனால் ஒரு­முறை கூட நான் சென்­ற­தில்லை. ‘திரைத்­து­றை­யில் பணி­யாற்­றிக் கொண்டு விருந்து நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­கப் பிடிக்­க­வில்லை என்று சொல்­கி­றாயே’ என்று பலர் என்னை வறுத்­தெ­டுத்­துள்­ள­னர். ஆனால் நான் என்னை மாற்­றிக் கொள்­ள­வில்லை,” என்­கி­றார் நந்­திதா.

அப்­ப­டி­யா­னால் படப்­பி­டிப்பு இல்­லாத ஓய்வு நேரங்­களில் என்ன செய்­வா­ராம்?

“வேறென்ன, முடிந்­த­வரை தூங்­கு­வேன். அதி­லும், தூக்­கம் என்­றால் சாதா­ரண தூக்­க­மல்ல, கும்­ப­கர்­ணனே தோற்­றுப் போகும் அள­வுக்­குத் தூங்­கு­வேன். ஒரு­முறை காலை 10 மணிக்கு தூங்­கப் போவ­தா­கச் சொல்­லி­விட்டு படுத்­த­வள்­தான். மறு­நாள் காலை­தான் கண்­வி­ழித்­தேன்.

“அதி­க­பட்­ச­மாக தொடர்ந்து 31 மணி நேரம் கூட தூங்­கி­யுள்­ளேன். ஆனால், இந்த ஊர­டங்­கின்­போது வீட்­டி­லேயே அடைந்து கிடந்­தா­லும் முழு­மை­யான ஓய்வு கிடைத்­தா­லும் அவ்­வாறு தூங்க முடி­ய­வில்லை.

“எனக்கு விளை­யாட்­டு­களில் ஆர்­வம் அதி­கம். நன்­றாக பேட்­மின்­டன் ஆடு­வேன். யோகா­ச­னத்­தி­லும் கணி­ச­மான நேரத்­தைச் செல­வி­டு­வேன்,” என்று சொல்­லும் நந்­திதாவைப் பற்றி அதி­கம் தெரி­யா­த­வர்­க­ளுக்­காக இந்­தத் தக­வல்.

இவ­ரது இயற்­பெ­யர் ஸ்வேதா. கன்­ன­டத்­தில் ‘நந்தா லவ்ஸ் நந்­திதா’ என்ற படத்­தில் அறி­மு­க­மா­ன­தால் நந்­திதா என்ற பெய­ரி­லேயே நடித்து வந்­தார்.

எனி­னும், நந்­திதா தாஸ், நந்­திதா ராஜ் எனப் பல நடி­கை­கள் இருந்­த­தால் பெயர்க் குழப்­பம் வரக்­கூ­டாது என்­ப­தற்­காக நந்­தி­தா­வு­டன் இயற்­பெ­ய­ரை­யும் சேர்த்­துக்­கொண்­டா­ராம்.

“இதற்­கு­தானே ஆசைப்­பட்­டாய் பால­கு­மாரா’ படத்­தில் நடித்­த­பி­றகு அதில் நான் ஏற்ற கதா­பாத்­தி­ர­மான குமுதா என்ற பெய­ரும் ரசி­கர்­கள் மன­தில் பதிந்து விட்­டது. தமிழ் ரசி­கர்­கள் குமுதா என்­று­தான் என்­னைக் குறிப்­பி­டு­கி­றார்­கள்.

“அதே­போல் தெலுங்­கில் அமுதா என்ற பாத்தி­ரத்­தில் நடித்தபிறகு அங்கு அந்­தப் பெயரே நிலைத்­து­விட்­டது. இப்­படி எனக்­குப் பல செல்­லப் பெயர்­கள் இருப்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது,” என்று சொல்­ப­வர் தற்­போது அர­விந்த்­சா­மி­யு­டன் ‘வணங்­கா­முடி’, காவல்­துறை பெண் அதி­கா­ரி­யாக ‘ஐபிசி 376’, சிபி­ரா­ஜு­டன் ‘கப­ட­தாரி’ என பல படங்­களில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!