‘மீண்டும் எஸ்.பி.பாலாவாக பிறக்க ஆசை’

பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பிர­ம­ணி­யத்­தின் இறு­திச்­ச­டங்கு நேற்று நடை­பெற்­றது. ஒட்­டு­மொத்த இந்­தி­யத் திரை­யு­ல­கைச் சேர்ந்த கலைஞர்களும் அவ­ரது மறை­வுக்கு இரங்­கல் தெரி­வித்­துள்­ள­னர். ஸ்ரீபதி பண்­டி­த­ராத்­யுல பால­சுப்­ர­ம­ணி­யம் என்ற எஸ்­பி­பி­யின் சொந்த ஊர் தமி­ழக - ஆந்­தி­ரப் பிர­தேச எல்­லை­யில் அமைந்­துள்ள கொனேட்­டம்­பட்டு ஆகும்.

கடந்த 1946ஆம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பிறந்த எஸ்­பிபி, சிறு வய­தி­லேயே இசை­யில் ஆர்­வம் கொண்­டி­ருந்­தார்.அத­னால்­தான் முறைப்­படி கர்­நா­டக சங்­கீ­தம் பயி­லா­விட்­டா­லும் அவ­ரால் மிகச்­சி­றந்த பாட­கராக உரு­வெ­டுக்க முடிந்­தது. எஸ்­பி­பி­யின் தந்தை எஸ்பி. சாம்­ப­மூர்த்தி ஒரு ஹரி­கதா கலை­ஞர்.

வழி­காட்­டிய குரு: கோதண்­ட­பாணி

பள்­ளிப் படிப்பை முடித்த பின்­னர் சென்­னை­யில் உள்ள கல்­லூ­ரி­யில் பொறி­யி­யல் படிப்பை முடித்­தார். அச்­ச­ம­யம் கல்­லூரி அள­வில் நடை­பெற்ற இசைப்­போட்­டி­களில் பல்­வேறு பரி­சு­களை வென்ற அவர், 1964ஆம் ஆண்டு தெலுங்கு இசையமைப்­பா­ளர் எஸ்.பி. கோதண்ட­பா­ணி­யும் பாட­கர் கண்­ட­சா­லா­வும் நடு­வர்­க­ளாக இருந்த மெல்­லி­சைக் கச்­சே­ரி­க­ளுக்­கான போட்­டி­யில் முதல் பரிசை வென்­றார்.

இதை­ய­டுத்தே அவ­ருக்கு சினி­மா­வில் பாடும் வாய்ப்பு கோதண்­ட­பாணி மூலம் கிடைத்­தது. அவ­ரையே பின்­னர் தமது குரு­வா­க­வும் வழி­காட்­டி­யா­க­வும் ஏற்­றுக்­கொண்­டார் எஸ்­பிபி.

தமி­ழில் பாடி வெளி­யா­காத முதல் பாடல்

1966ஆம் ஆண்டு தெலுங்­குப் படத்­தில் தமது முதல் பாட­லைப் பாடிய எஸ்­பிபி, பின்­னர் தமி­ழி­லும் அறி­மு­க­மா­னார். தமி­ழில் எம்.எஸ்.விஸ்­வ­நா­தன் இசை­ய­மைத்த ‘ஹோட்­டல் ரம்பா’ படத்­தில் இவர் பாடி­யி­ருந்த நிலை­யில் அந்­தப் படம் வெளி­யா­க­வில்லை.

அதன்­பி­றகு எம்­ஜி­ஆர். நடித்த ‘அடி­மைப்­பெண்’ படத்­தில் இடம்­பெற்ற ‘ஆயி­ரம் நிலவே வா’ என்­பதே இவர் தமி­ழில் பாடி வெளி­யான முதல் பாட­லாக அமைந்­தது. எஸ்­பிபி திரை­யு­ல­கில் அறி­மு­க­மான புதி­தில், நீண்ட கால­மாக மூத்த பாட­கர் டி.எம்.சௌந்­தர்­ரா­ஜ­னுக்கு மாற்றே இல்லை என்ற நிலை இருந்­தது. எல்­லா­வி­த­மான பாடல்­க­ளை­யும் உயி­ரோட்­டத்­து­டன் பாடும் தன்­னு­டைய திற­மை­யால் தமிழ்த் திரை­யு­ல­கில் மெல்ல காலூன்­றி­னார் பாலா.

பெரும் புகழ் தந்த ‘சங்­க­ரா­ப­ர­ணம்’

1980ல் வெளி­வந்த ‘சங்­க­ரா­ப­ர­ணம்’ எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் கலைப்­ப­ய­ணத்­தில் பெரும் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இப்­ப­டத்­துக்கு கே.வி.மகா­தே­வன் இசை­ய­மைத்­தி­ருந்­தார். முறைப்­படி கர்­நா­டக சங்­கீ­தம் பயி­லா­த­வர் என்­றா­லும் இப்­ப­டத்­தில் இடம்­பெற்ற பாடல்­கள் மூலம் பெரும் சங்­கீத வித்­வான்­க­ளின் மன­தை­யும் கவர்ந்­தார் எஸ்­பிபி.

இந்­தப் படம் அவ­ருக்கு சிறந்த பின்­ன­ணிப் பாட­க­ருக்­கான தேசிய விரு­தைப் பெற்­றுத் தந்­தது.

விரு­து­களை வாங்­கிக்­கு­வித்த அபார கலை­ஞர்

சிறந்த பின்­ன­ணிப் பாட­க­ருக்­கான விருதை ஆறு முறை வென்­றி­ருக்­கி­றார் எஸ்­பிபி. இவர் பெற்ற மாநில அரசு விரு­து­கள், இதர அமைப்­பு­கள் அளித்த விரு­து­க­ளின் பட்­டி­யல் மிக நீள­மா­னது.

நான்கு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளால் டாக்­டர் பட்­டம் வழங்கி கௌர­விக்­கப்­பட்­ட­வர். மேலும் இந்­திய அர­சின் பத்­ம­பூ­ஷ­ணன் விரு­தை­யும் பெற்­ற­வர்.

அண்­மைய பேட்டி ஒன்­றில், மறு­பி­றவி என்று ஒன்று இருந்­தால் மீண்­டும் எஸ்.பி.பாலா­வாக பிறக்க வேண்­டும் என்­பதே தமது விருப்­பம் என்று கூறி­யி­ருந்­தார்.

“உல­கெங்­கும் உள்ள ரசி­கர்­கள் காட்­டும் அன்­பும் என் மீதான அக்­க­றை­யும் என்னை நெகிழ வைக்­கிறது. அதற்கு பிர­தி­ப­ல­னாக எனது குர­லால் அவர்­களை மகிழ்­விக்­கி­றேன். வாழ்க்­கை­யில் இந்த ஒரு பாக்­கி­யம் போது­மா­னது எனக் கரு­து­கி­றேன்,” என்­றார் பாலா. இது சாத்­தி­ய­மா­னால் அவ­ரது ரசி­கர்­கள் மகிழ்­வார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!