சுடச் சுடச் செய்திகள்

‘என் கனவு நிறைவேறியது’

ஒரு­வ­ழி­யாக ‘சூர­ரைப் போற்று’ படத்­தின் முன்­னோட்­டம் வெளி­யாகி உள்­ளது. அதே­போல் கடை­சி­யாக அறி­வித்­த­படி நவம்­பர் 12ஆம் தேதி படம் வெளி­யீடு காண்­பது உறுதி என படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் முன்­னோட்­டம் மிகச்­சிறப்­பாக இருப்­ப­தாக ரசி­கர்­களும் பிர­ப­லங்­கள் பல­ரும் பாராட்டு தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

முன்­னோட்­டம் வெளி­யான சில மணி நேரத்­தி­லேயே ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் அதை இணை­யத்­தில் கண்டு ரசித்து, தங்­க­ளுக்­குப் பிடித்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இத­னால் படக்­குழு உற்­சா­கம் அடைந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் ‘சூர­ரைப் போற்று’ படத்­தில் நடித்­த­தன் மூலம் தமது நீண்­ட­நாள் கனவு நன­வா­ன­தாக உணரத் தோன்­று­கிறது என்று படத்­தின் நாயகி அபர்ணா பால­மு­ரளி தெரி­வித்­துள்­ளார்.

“இயக்­கு­நர் சுதா கொங்­கரா அபா­ர­மான திறமை கொண்­ட­வர். இப்­ப­டத்­தில் முன்­ன­ணிக் கலை­ஞர்­கள் பல­ரும் பணி­யாற்றி உள்­ள­னர்.

“அவர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும் பெரும் வாய்ப்பு எனக்­குக் கிடைத்­தது. இப்­ப­டிப்­பட்ட ஒரு படத்­தில் நடிக்­க­வேண்­டும் என்ற கனவு நன­வாகி உள்­ளது,” என்று அபர்ணா கூறி­யுள்­ளார்.

தாம் ஏற்ற கதா­பாத்­தி­ரத்­துக்­காக மிகக் கடி­ன­மாக உழைத்­தி­ருப்­ப­தா­க­வும் உடல், மன ரீதி­யாக தம்­மைத் தயார்­ப்ப­டுத்­திக்­கொள்ள வேண்டி இருந்­தது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கூட்டு முயற்சி, காதல், வாழ்க்­கை­யில் எதிர்­கொள்­ளும் நடை­மு­றைச் சிக்­கல்­கள், பறப்­ப­தற்­கான ஓர் இளை­ஞ­னின் கனவு என்று பல்­வேறு அம்­சங்­க­ளைக் கொண்ட கதையை இயக்­கு­நர் திற­மை­யா­கக் கையாண்­டி­ருப்­ப­தாக பாராட்­டும் அபர்ணா, கனவு காண்­ப­வர்­க­ளுக்கு இந்­தப் படம் பெரும் ஊக்­க­மாக அமை­யும்.” என்­கி­றார்.

இதற்­கி­டையே பிர­பல நடி­கர்­கள் அபி­ஷேக் பச்­சன், மாத­வன் உள்­ளிட்ட நடி­கர்­கள் ‘சூரரைப் போற்று’ முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­புக்கு பாராட்­டுத் தெரி­வித்­துள்­ள­னர்.

இதன்­மூ­லம் படம் பிரம்­மாண்­ட­மா­க­வும் நல்ல தக­வல்­க­ளு­ட­னும் வெளி­வ­ரும் என்­பது உறு­தி­யாகி இருப்­ப­தாக பல­ரும் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் ‘சூர­ரைப் போற்று’ தன் இத­யத்­துக்கு மிக­வும் நெருக்­க­மான படம் என்று நாய­கன் சூர்யா தெரி­வித்­துள்­ளார்.

இப்­ப­டத்­தின் மூல­மாக சமூ­கத்­துக்­குத் தேவை­யான நல்ல கருத்து சொல்­லப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் தமது சமூக வலைத்­தள பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

“இது வழக்­கத்தைவிட சற்றே முக்­கி­யத்­து­வம் வாய்ந்த சிறப்­பான படம் என்­பேன்.

“இப்­ப­டத்­தின் வாயி­லாக, நாம் உண்­மை­யா­க­வும் அர்ப்­ப­ணிப்பு உணர்­வோ­டும் செயல்­பட்­டால் நம் கன­வு­கள் நன­வா­கும் செயலை எது­வும் தடுக்க முடி­யாது என்ற நல்ல செய்­தியை சொல்ல விரும்­பு­கி­றோம். ரசி­கர்­கள் தங்­கள் நிலை­யான ஆத­ர­வைத் தொடர்ந்து வழங்­கு­வார்­கள் என்று நம்­பு­கி­றோம்,” என்று சூர்யா கூறி­யுள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon