'கர்ணன்' படத்தின் பின்னணிக் குரல் பதிவுப் பணி முடிந்துள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இது அவரது 41வது படம். மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
இந்நிலையில் "'கர்ணன்' குரலை விரைவில் கேட்பீர்கள்," என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தனுஷ்.