அனு: என்னிடம் விளக்கமே கேட்பதில்லை

இளம் நாயகி அனு இம்­மா­னு­வேல் இயக்­கு­நர் ஜோதி­கி­ருஷ்­ணா­வைக் காத­லிப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இது­கு­றித்து இரு­வ­ருமே இது­வரை ஏதும் சொல்­ல­வில்லை. எனி­னும் இரு­வரை­யும் பொது இடங்­களில் அடிக்­கடி காண­மு­டி­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் பிறந்து வளர்ந்­த­வர் அனு. பின்­னர் இந்­தி­யா­வி­லும் சில ஆண்­டு­கள் கல்வி பயின்­றார்.

குழந்தை நட்­சத்­தி­ர­மாக 'ஸ்வப்னா சஞ்­சரி' மலை­யா­ளப் படம் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னார் அனு. அதன்­பின்­னர் நிவின்­பாலி நடித்த 'ஆக்­‌ஷன் ஹீரோ பிஜு' படத்­தில் இவரை நாய­கி­யாக அறி­மு­கம் செய்­த­னர். அதன்­பின்­னர் இயக்­கு­நர் மிஷ்­கி­னின் பார்­வை­யில் பட்­ட­தால் 2017ஆம் ஆண்டு அவ­ரது இயக்­கத்­தில் வெளி­யான 'துப்­பறி ­வா­ளன்' படம் மூலம் தமி­ழில் கால்­பதித்­தார் அனு.

"மிஷ்­கின் சார் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க வைத்­த­தால் எனக்கு அவர் ­மீது வருத்­தம் என்று சிலர் கதை­கட்டி விட்­ட­னர். உண்­மை­யில் அந்­தச் சிறிய­பாத்­தி­ரம்­தான் ரசி­கர்­கள் மன­தில் என்னை ஆழ­மா­கப் பதிய வைத்­தது என்­பேன். அத­னால்­தான் சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்­பும் எனக்குக் கிடைத்­தது," என்­கி­றார் அனு.

தெலுங்கு ரசி­கர்­கள் பலர் இவர் ஏற்று நடித்த கதா­பாத்­தி­ரத்­தின் பெய­ரால் மஞ்சு என்றே குறிப்­பி­டு­கின்­ற­னர். அங்கு 'ஆக்­சி­ஜன்' படத்­தில் நடித்­த­போ­து­தான் அனு­வுக்­கும் அந்­தப் படத்தை இயக்­கிய ஜோதி கிருஷ்­ணா­வுக்­கும் இடையே காதல் மலர்ந்ததாகத் தக­வல்.

பிர­பல தயா­ரிப்­பா­ளர் ரத்­தி­னத்­தின் மகன்­தான் ஜோதி கிருஷ்ணா. தமி­ழில் 'கேடி', 'எனக்கு 20 உனக்கு 18' ஆகிய படங்­களை இயக்­கி­ய­வர்.

இதற்­கி­டையே அண்­மை­யில் தமது பிறந்­த­நா­ளைக் கொண்­டாடி உள்­ளார் அனு. அன்­றைய தினம் ஜோதி கிருஷ்­ணா­வு­டன் தொலை­பே­சி­யில் நீண்ட நேரம் பேசி­னா­ராம். தற்­போது தமி­ழில் இரண்டு படங்­க­ளி­லும் தெலுங்­கில் ஒரு படத்­தி­லும் நடித்து வரு­கி­றார்.

"எனக்கு இப்­போ­து­தான் 24 வய­தா­கிறது. அதற்­குள் காதல், திரு­ம­ணம் என்று என்­னைப்­பற்றி பல­வி­த­மான தக­வல்­க­ளைப் பரப்பி வரு­கின்­ற­னர். ஆனால் அவை­யெல்­லாம் உண்­மையா என்று சம்­பந்­தப்­பட்ட என்­னி­டம் ஒரு­வார்த்தை கூட கேட்­ப­தில்லை," எனப் புலம்புகிறார் அனு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!