சீறும் கேள்விகளுடன் வரப்போகும் ‘கர்ணன்’

'கர்­ணன்' படத்­தில் நடித்­த­தன் மூலம் ஒரு நடி­க­னாக, மனி­த­னாக நிறைய விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள முடிந்­தது என்­கி­றார் தனுஷ்.

அப்­ப­டத்­தின் இயக்­கு­ந­ரான மாரி செல்­வ­ரா­ஜின் மன உறு­தி­யும் அவ­ரது மனி­தத்­தன்­மை­யும் தம்மை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­த­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

'கர்­ணன்' படக்­கு­ழு­வி­னர் நேற்று முன்­தி­னம் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர். இதில் தனுஷ் பங்­கேற்­க­வில்லை.

ஹாலி­வுட் படத்­தின் படப்­பிடிப்பிற்­காக அவர் வெளி­நாட்­டில் இருப்­ப­தாக தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் வெளி­நாட்­டில் இருந்­த­ப­டியே அவர் அனுப்­பிய கடி­தம் இந்­நி­கழ்­வின்­போது வாசித்­துக் காட்­டப்­பட்­டது.

அதில், மிக விரை­வில் நாடு திரும்ப இருப்­ப­தா­க­வும் 'கர்­ணன்' தன் மன­துக்கு நெருக்­க­மான படம் என்­றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"நான் கூடு­தல் முக்­கி­யத்­து­வம் தரு­கிற, அதி­கம் கொண்­டா­டு­கிற பலர் இந்­தப் படத்­தில் பங்­காற்­றி­யுள்­ள­னர். மாரி செல்­வ­ராஜ் தினம்­தி­னம் என்னை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­தார். அவ­ரைப் போன்று ஒரு­வ­ரால் நல்ல மனி­த­ராக இருக்­க­மு­டி­யுமா என்று அடிக்­கடி யோசிப்­பேன். என்­னையே உங்­க­ளு­டைய கர்­ண­னாக மாற்­றி­ய­தற்­கும் என் வாழ்க்­கை­யில் நீங்­கள் வந்­த­தற்­கும் மிக்க நன்றி மாரி.

"எப்­போ­தும் இப்­ப­டியே இருந்து­வி­டுங்­கள். உங்­க­ளுக்­கும் சிறப்­பான ஓரி­டம் காத்­துக்கொண்­டி­ருக்­கிறது.

"என்­னை­யும் நான் தேர்ந்­தெ­டுக்­கும் கதை­க­ளை­யும் பெரி­தும் நம்­பு­கிற தயா­ரிப்­பா­ளர் தாணு சாருக்கு நன்றி.

"அவர் என்­மீது வைத்­தி­ருக்­கிற கண்­மூ­டித்­த­ன­மான நம்­பிக்கை ஒரு நடி­க­னாக எனக்­குள்ள பொறுப்­பு­களை நினை­வூட்­டிக்­கொண்டே இருக்­கிறது. மேலும் அதி­க­மாக உழைக்­க­வேண்­டும் எனும் சக்­தியை­யும் அளிக்­கிறது," என்று தனுஷ் தெரி­வித்­துள்­ளார்.

"தமிழ் மண்­ணின் இசை வழி­யா­க­வும் அம்­மண்­ணின் கலை­ஞர்­கள் மூல­மா­க­வும் 'கர்­ணன்' படத்­துக்கு இசை­ய­மைப்­பா­ளர் சந்­தோஷ் நாரா­ய­ணன் யானை பலம் சேர்த்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், அதற்­காக நன்றி தெரி­விப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.

"எனக்கு நலன் விரும்­பி­கள் குறை­வு­தான். என்­னு­டைய உண்­மை­யான நலன் விரும்­பி­யாக உள்­ளார் சந்­தோஷ். இவ்­வே­ளை­யில் மீனா சந்­தோ­ஷுக்­கும் நன்றி சொல்ல வேண்­டும். கார­ணம் அவர்­தான் மாரி செல்­வ­ராஜை அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­தார்.

"'கர்­ணன்' படக்­கு­ழு­வி­ன­ருக்­கும் அவர்­க­ளு­டைய அர்ப்­ப­ணிப்பு, அன்பு, ஆத­ர­வுக்­கும் நன்றி. கர்ணன் வரு­வான், சீறும் கேள்­வி­களை ஏந்தி வரு­வான்," என்று தனுஷ் குறிப்­பிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!