திரைத் துளிகள்

மீண்டும் வதந்தி: கோபத்தில் கீர்த்தி

தனக்கும் அனிருத்துக்கும் இடையே காதல் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்த் தகவல் என்று பலமுறை மறுத்த பிறகும் அதுகுறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்படுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இதுவரை நான்கைந்து முறை ஊடகங்களும் வதந்தி பரப்புவோரும் தமக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக அவர் கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளார்.

"முதன்முதலாக இந்த வதந்தியைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தேன். ஒவ்வொரு முறையும் யாரேனும் புதுப்புது நபருடன் என்னை இணைத்து திருமணச் செய்தியை வெளியிடுகிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனினும் எப்போது திருமணம் நடந்தாலும் அதுகுறித்து வெளிப்படையாக அறிவிப்பேன்," என்று அண்மை செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் கீர்த்தி.

ஹூமாவிடம் விவரம் கேட்ட நடிகர்

'வலிமை' படம் குறித்து அண்மைத் தகவல் ஏதேனும் உள்ளதா என அஜித் ரசிகர்கள் பல பிரபலங்களிடம் நேரடியாகவும் சமூக வலைத் தளங்கள் மூலமாகவும் விசா ரிப்பது வழக்கமாகிவிட்டது.

இவ்வாறு செய்யவேண்டாம் என அஜித் தரப்பில் அறிவு றுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் அந்த வேலையைச் செய்துள்ளார்.

அண்மையில் அவர் சமூக வலைத்தளத்தில் ஏதோ பதிவிட, அதற்கு 'வலிமை' பட நாயகிகளில் ஒருவரான ஹூமா குரேஷி பின்னூட்டமிட்டிருந்தார். இதையடுத்து அவரிடம் 'மேடம்... 'வலிமை' படம் குறித்த புதுத் தகவல்?' என்று கேட்டுள்ளார் சித்தார்த். இதை அஜித் ரசிகர்கள் வரவேற்றுள்ள னர். எனினும் ஹூமா இன்னும் பதில் அளிக்கவில்லை.

ரசிகர் வாழ்த்தால் நெகிழ்ந்த ஸ்ரீதிவ்யா

தமது 28வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடி உள்ளார் ஸ்ரீதிவ்யா. இதை யடுத்து ரசிகர்கள் அவர் நடித்த திரைப் படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அவரது அழகான புகைப் படங்களைப் பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதனால் நெகிழ்ந்துபோயிருப்பதாகக் கூறும் ஸ்ரீதிவ்யா, திரையுல குக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது தமிழில் அதர்வாவுடன் 'ஒத்தைக்கு ஒத்தை'யில் நடிக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!