ஜார்ஜியாவில் முகாமிடும் விஜய் படக்குழு

விஜய் படத்­தின் படப்­பி­டிப்பை ஜார்­ஜியா நாட்­டில் நடத்த உள்­ள­னர். படக்­குழு அந்­நாட்­டுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

‘தள­பதி 65’ படத்தை நெல்­சன் திலீப்­கு­மார் இயக்­கு­கி­றார். விஜய் ஜோடி­யாக பூஜா ஹெக்டே நடிக்­கி­றார். மிகுந்த பொருட்­செ­ல­வில் இப்­ப­டம் உரு­வா­கிறது.

முக்­கி­ய­மான காட்­சி­களை ரஷ்­யா­வில் பட­மாக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். இந்­நி­லை­யில் பல நாடு­களில் கொரோனா கிரு­மித்­தொற்று மீண்­டும் அதி­க­ரித்து வரு­கிறது. எனவே, ரஷ்­யா­வில் படப்­பி­டிப்பை நடத்­து­வது தடை­பட்­டுள்­ள­தாம்.

இதை­ய­டுத்தே ஜார்­ஜி­யா­வில் படப்­பி­டிப்பை நடத்த முடிவு செய்­துள்­ளார் இயக்­கு­நர் நெல்­சன். எனி­னும் கடந்த வாரமே ஜார்­ஜியா செல்ல இருந்த பய­ணத் திட்­டம் விஜய்க்­காக மாற்றி அமைக்­கப்­பட்­டது.

தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வாக்­க­ளித்த பிறகே வெளி­நாடு கிளம்பவேண்­டும் என்­றா­ராம் விஜய். தேர்­த­லில் தவ­றா­மல் வாக்­க­ளிக்­கும் வழக்­க­ம் உள்­ள­வர் என்­ப­தால் படக்­கு­ழு­வும் காத்­துக் கிடந்­தது. இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் தனது ஜன­நா­ய­கக் கட­மையை நிறை­வேற்­றிய கையோடு பய­ணத்­துக்­குத் தயா­ராகி விட்­டார் விஜய்.

“பனிப்­பி­ர­தே­ச­மான காஷ்­மீ­ரில்­தான் சில காட்­சி­க­ளைப் பட­மாக்க திட்­ட­மிட்­டி­ருந்­தோம். எனி­னும் காஷ்­மீ­ரில் படப்­பி­டிப்பு நடத்­தி­னால் சில சிக்­கல்­கள் எழக்­கூ­டும் என அங்­குள்ள ஏற்­பாட்­டுக் குழு­வி­னர் தெரி­வித்­த­னர்.

“எனவே, தேவை­யின்றி எந்­தச் சிக்­க­லி­லும் சிக்கி­வி­டக்­க­டாது என்­ப­தால் காஷ்­மீ­ரைத் தவிர்த்து விட்­டோம். காஷ்­மீ­ரைப் போலவே ஜார்­ஜி­யா­வி­லும் பனிக்­கட்­டி­கள் சூழ்ந்த பல்­வேறு பகு­தி­கள் உள்­ளன. எனவே, படப்­பி­டிப்பு தொடர்­பான திட்­டங்­களில் சில மாற்­றங்­க­ளைச் செய்­துள்­ளோம்.

“குறைந்­த­பட்­சம் 10 நாட்­கள் முதல் அதி­க­பட்­ச­மாக இம்­மாத இறுதி வரை தள­பதி 65 படத்­தின் படப்­பி­டிப்பு ஜார்­ஜி­யா­வில் நடை­பெறக்­கூ­டும்,” என்று படக்­குழு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே இப்­ப­டத்­தில் யோகி­பா­பு­வும் இணைந்­துள்­ளார். விஜய்­யின் முந்­தைய இரு படங்­க­ளி­லும் நடித்­துள்­ளார் யோகி.

அதை மன­தில் வைத்­தி­ருந்து ‘தள­பதி 65’ படத்­தி­லும் அவர் இடம்­பெற வேண்­டும் என விரும்­பி­னா­ராம் விஜய்.

அதை­ய­டுத்து யோகி­பா­பு­வுக்கு ஓர­ளவு முக்­கி­யத்­து­வம் தரும் வகை­யில் ஒரு கதா­பாத்­தி­ரத்தை உரு­வாக்கி உள்­ளா­ராம் நெல்­சன்.

யோகிபாபு இப்­ப­டத்­தில் நடிக்­க­வேண்­டும் என ‘சன் பிக்சர்ஸ்’ நிறு­வ­ன­மும் விரும்பி உள்­ளது.

இதை அறிந்து உற்­சா­கம் அடைந்த யோகி­பாபு இம்­முறை சிறிது நேரம் திரை­யில் தோன்­றி­னா­லும் விஜய் ரசிகர்­க­ளைக் கவரவேண்­டும் எனும் முனைப்­பு­டன் இருப்­ப­தா­கத் தக­வல்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.