‘காதலில் தோற்றுவிட்டேன்’

தாம் காத­லில் தோல்வி அடைந்­தது உண்­மை­தான் என நடிகை அஞ்­சலி தெரி­வித்­துள்­ளார்.

அந்­தத் தோல்­வி­யில் இருந்து மீண்­டு­விட்­ட­தா­க­வும் தன்­னைப் பற்றி சிலர் வீண் வதந்­தி­க­ளைப் பரப்பி வரு­வ­தா­க­வும் அவர் அண்­மைய பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.

‘அங்­காடி தெரு’ படத்­தின் மூலம் அறி­மு­க­மா­ன­வர் அஞ்­சலி. பின்­னர் ‘எங்­கே­யும் எப்­போ­தும்’, ‘மங்­காத்தா’, ‘பலூன்’, ‘கல­க­லப்பு’ உள்­ளிட்ட படங்­களில் நடித்­துப் பெயர் பெற்­றார்.

இவ­ருக்­கும் நடி­கர் ஜெய்க்­கும் இடையே காதல் மலர்ந்­த­தாக தக­வல் பர­வி­யது. எனி­னும் இரு­வ­ரும் அது­கு­றித்து வெளிப்­ப­டை­யாக ஏதும் அறி­வித்­த­தில்லை. மறுப்­பும் தெரி­வித்­த­தில்லை.

இந்­நி­லை­யில் உடல் பரு­மன் கார­ண­மாக திரை­யு­ல­கில் இருந்து சில­கா­லம் வில­கி­யி­ருந்­தார் அஞ்­சலி. அதன்­பின்­னர் தீவிர உடற்­ப­யிற்சி மேற்­கொண்டு பழை­ய­படி கட்­டுக்­கோப்­பான உடல் வாகு­டன் வலம் வந்­தார்.

மேலும், குடும்­பப் பிரச்­சினை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர் மீண்­டும் பட­வாய்ப்­பு­களை இழக்க நேரிட்­டது. அந்­தச் சம­யத்­தி­லும் அவ­ரது காத­லர்­தான் பல வகை­யி­லும் ஆறு­தல் அளித்து அவ­ருக்­குத் துணை நின்­ற­தா­கப் பேசப்­பட்­டது.

இந்­நி­லை­யில் தமது காதல் முடி­வுக்கு வந்­து­விட்­ட­தா­கத் தெரி­வித்­துள்­ளார் அஞ்­சலி. அத்­த­கைய தோல்­வி­யால் ஏற்­படும் மன­வே­த­னை­யைத் தாங்­கிக் கொள்­வது மிக­வும் கடி­னம் என்று அண்­மைய பேட்டி ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“நடிகை என்­ப­தால் என்­னால் தோல்­வி­க­ளைத் தாங்­கிக்­கொள்ள முடி­யும் என்று சிலர் நினைக்­கி­றார்­கள். அது சரி­யல்ல. நானும் இவ்­வி­ஷ­யத்­தில் சரா­ச­ரிப் பெண்­தான்.

“பொது­வா­கவே காதல் தோல்வி என்­பது பெண்­க­ளைத்­தான் அதி­கம் பாதிக்­கிறது. பெண்­க­ளின் இத­யம் கற்­க­ளால் ஆனவை அல்ல. அத­னால் காதல் தோல்­வி­யின்­போது கடும் மன­வே­த­னையை அனு­ப­வித்­தேன்,” என்று அஞ்­சலி தெரி­வித்­துள்­ளார்.

தாம் காதல் வயப்­பட்­ட­தன் விளை­வாக குழந்தை பெற்­றுக்­கொண்­ட­தா­க­வும் தற்­போது இரு குழந்­தை­க­ளு­டன் சினி­மாவை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வரு­வ­தா­க­வும் தக­வல் பர­வி­யுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், இத்­த­கைய பல தக­வல்­கள் அடிப்­படை ஆதா­ர­மற்­றவை எனக் கூறி­யுள்­ளார்.

“நான் யாரை­யும் காத­லிக்­கவே இல்லை என்று கூற­மாட்­டேன். நான் ஒரு­வ­ரைக் காத­லித்­தது உண்­மை­தான். ஆனால், அந்­தக் காதல் கைகூ­ட­வில்லை. இது­தான் உண்மை.

“ஒரு­வேளை எனது காதல் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு நல்­ல­வி­த­மாக இருந்­தி­ருந்­தால் அது­கு­றித்து நானே வெளிப்­ப­டை­யாக விவ­ரம் தெரி­வித்­தி­ருப்­பேன். ஆனால், எனது எதிர்­பார்ப்பு நிறை­வே­ற­வில்லை. அந்த ஏமாற்­றம் எனக்கு என்­றும் இருக்­கும்,” என்­கி­றார் அஞ்­சலி.

காதல் தோல்வி கார­ண­மாக தாம் சில பட வாய்ப்­பு­களை இழந்­தது உண்­மை­தான் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அது­கு­றித்து இப்­போது கவ­லைப்­பட்டு ஏதும் நடக்­கப் போவ­தில்லை என்­கி­றார்.

காதல் தோல்­வி­யால் ஏற்­பட்ட வேத­னை­யி­லி­ருந்து தாம் வெளியே வந்­து­விட்­ட­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

“மன­தைப் பாதிக்­கும் ஒரு தோல்­வி­யி­லி­ருந்து மீண்டு வரு­வது எவ்­வ­ளவு சிர­மம் என்­பதை உணர்ந்­துள்­ளேன். இவ்­வாறு மீண்டு, மீண்­டும் என் பணி­யில் முழுக்­க­வ­னத்­தை­யும் செலுத்த என் தாயார்­தான் கார­ணம். அவர் மிக வலி­மை­யான பெண்­மணி.

“வாழ்க்­கை­யில் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு மீண்­ட­வர் என் தாய். நிறைய வேத­னை­களை அனு­ப­வித்­தி­ருக்­கி­றார். சிறு­வ­யது முதல் அவ­ரைப் பார்த்து வளர்ந்­த­தால் அவ­ரைப் போலவே நானும் வலி­மை­யான பெண்­ணாக மாற­வி­ரும்­பு­கி­றேன்.

“என் தாயார்­தான் தோல்­வி­யி­லி­ருந்து மீண்­டு­வர எனக்கு தைரி­யம் அளித்­தார். அவர் தொடக்­கம் முதல் கொடுத்த ஊக்­கத்­தால்­தான் திரை­யு­ல­கில் இன்­னும் என்­னால் தாக்­குப்­பி­டிக்க முடி­கிறது.

“தொடர்ந்து சினி­மா­வில் நீடிப்­பேன். எனக்­கான வாய்ப்­பு­கள் கிடைக்­கும் என்­றும் என்­னைத் தேடி வந்­த­டை­யும் என்­றும் நம்­பு­கி­றேன். மிக விரை­வில் என்­னைத் திரை­யில் பார்க்க முடி­யும்,” என்று சொல்­லும் அஞ்­சலி, அடுத்து சுந்­தர்.சி இயக்கி தயா­ரிக்­கும் புதிய படத்­தில் ஒப்­பந்­த­மாகி இருப்­ப­தா­கத் தக­வல்.

, :   

அஞ்சலி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.