‘மொழிகள் மிக முக்கியம்’

தாம் நடிக்­கும் ஒவ்­வொரு மொழிப் பட­மும் சம்­பந்­தப்­பட்ட மொழி­யும் தமக்கு முக்­கி­யம் என்­கி­றார் ராஷ்­மிகா மந்­தனா.

தமி­ழில் அறி­மு­க­மான 'சுல்­தான்' படம் வசூல் ரீதி­யில் வெற்றி பெற்­றது தமக்கு மகிழ்ச்சி தந்­தி­ருப்­ப­தா­க­வும் இவர் கூறி­யுள்­ளார்.

"பொது­வாக 5 பாடல்­கள், 4 சண்­டைக்­காட்­சி­கள் கொண்ட படங்­களில் நடிக்க நடி­கை­கள் விரும்­பு­வார்­கள். நானும் அப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க ஆர்­வ­மாக உள்­ளேன்.

"அதே­ச­ம­யம் கிரா­மத்­துப் பெண், உரி­மை­க­ளுக்­காக சமூ­கத்தை எதிர்த்­துப் போரா­டும் பெண்­ணின் வேடங்­கள் கிடைக்­கும்­போது மகிழ்ச்­சி­யு­டன் ஏற்­றுக்­கொள்­கி­றேன்.

"இதன்­மூ­லம் அதிக ரசி­கர்­க­ளைச் சென்­ற­டைய முடி­யும் என்று கரு­து­கி­றேன்," என்­கி­றார் ராஷ்­மிகா.

தமி­ழில் ஒரு படத்­தில் மட்­டுமே நடித்து முடித்­துள்ள நிலை­யில் தமிழ் ரசி­கர்­க­ளு­டன் நெருக்­க­மா­கி­விட்­டது போன்ற ஓர் உணர்வு மன­தில் ஏற்­பட்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"நான் இப்­ப­டிப் பேசு­வதை சிலர் நம்­பா­மல் போக­லாம். உண்­மை­யில் தமிழ் சினிமா உல­கம் குறித்து நான் அதி­கம் அறிந்­தி­ருக்­க­வில்லை.

"இங்கு ஒரு படம் எப்­படி உரு­வா­கிறது, யார் முக்­கி­ய­மா­ன­வர்­கள், யாருக்கு ரசி­கர்­க­ளி­டம் அதிக வர­வேற்­புள்­ளது என்­ப­தெல்­லாம் தெரி­யா­மல்­தான் முதல் படத்­தில் நடிக்க சம்­ம­தித்­தேன்.

"எனி­னும் ஒரு படத்­தில் நடித்து முடித்­த­துமே தமிழ் மொழி, கலா­சா­ரம், தமிழ் மக்­கள், அவர்­க­ளின் உணவு என்று ஏதே­னும் ஒரு விஷ­யம் அவ்­வப்­போது எனக்­குள் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­ப­டியே உள்­ளன.

"எப்­போ­துமே ஒரு படத்­தின் வெற்­றியை அனுபவித்த பின்­னர் நான் அங்­கேயே தேங்கி விடு­வ­தில்லை. அடுத்து என்ன செய்­ய வேண்­டும் என்­ப­தில்­தான் கவ­னம் செலுத்­து­வேன்.

"அதே­ச­ம­யம் பல மொழிப் படங்­களில் நடிக்­கும்­போது ஒரு நடி­கை­யாக எனது திறமை அதி­க­ரிக்­கும் என்­ப­தில் எனக்கு சந்­தே­கமே இல்லை," என்று சொல்­லும் ராஷ்­மிகா, இடை­வி­டாத படப்பிடிப்புகளால் தமது தனிப்­பட்ட வாழ்க்­கை­யைக் கவ­னிக்க நேர­மி­ருப்­ப­தில்லை என்று புலம்­பு­கி­றார்.

படப்­பி­டிப்­பு­க­ளுக்­காக இடை­வி­டா­மல் பல்­வேறு இடங்­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வ­தால் எந்­த­வொரு இடத்­தி­லும் அதிக நாட்­களை செல­விட முடி­ய­வில்­லை­யாம்.

அத­னால் திரை­யு­ல­கில் யாரு­ட­னும் நெருக்­க­மான நட்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முடி­ய­வில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், இன்­னும்­கூட சிறு வயது தோழி­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"திரை­யு­ல­கில் நல்ல இடத்தை அடை­ய­வேண்­டும் என்­றால் சில தியா­கங்­க­ளைச் செய்யத் தயங்­கக்­கூ­டாது என்­பதை உணர்ந்­துள்­ளேன்.

"நான் இப்­போது ஓட்­டப்­பந்­த­யம் போன்ற போட்­டியை எதிர்­கொண்­டுள்­ளேன் என்­பது உண்­மை­தான். நான் ஓடிக்­கொண்­டி­ருக்­கும் பாதை சரி­யா­னது என்று நம்­பு­கி­றேன்.

"இத்­த­கைய எண்­ண­மும் நம்­பிக்­கை­யும் இருக்­கும்­வரை பல மொழிப் படங்­களில் நல்ல கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துப் பெயர் வாங்க முடி­யும் எனத் தோன்­று­கிறது," என்­கி­றார் ராஷ்­மிகா.

கன்­ன­டத்­தி­ல்­தான் ராஷ்­மிகா முத­லில் அறி­மு­க­மா­னார். ஆனால் பிற மொழி­களில் நடிக்­கத் தொடங்­கி­ய­தும் அவர் தமது தாய்­மொ­ழியை மறந்­து­விட்­ட­தாக ஒரு புகார் எழுந்­துள்­ளது. ஆனால் இதை திட்­ட­வட்­ட­மாக மறுக்­கி­றார் ராஷ்­மிகா.

"எந்­த­வொரு மொழி­யை­யும் நான் குறை­வாக மதிப்­பிட்­ட­தில்லை. எனக்கு அனைத்து மொழி­களும் முக்­கி­யம்­தான். தற்­போது பிற மொழி­க­ளி­லும் நடித்து வரு­வ­தால் சில படங்­களை நிரா­க­ரிக்க வேண்­டிய கட்­டா­யம் ஏற்­படு­கிறது.

"கன்­னட ரசி­கர்­களை நான் மிக­வும் நேசிக்­கி­றேன். தொடக்க காலத்­தில் எனக்கு அவர்­கள் அளித்த ஆத­ரவை மறக்­கவே இய­லாது. எனி­னும் ஒரு­சி­ல­ரது புகா­ருக்கு முக்­கி­யத்­து­வம் அளித்து நான் ரசி­கர்­களை எந்­த­ளவு நேசிக்­கி­றேன் என்­பதை விளக்க பெரிய அறிக்கை விட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

"என் ரசி­கர்­களை எந்­த­ள­வுக்கு மதிக்­கிறேன் என்­பதை வெளிப்­ப­டுத்த நான் ஏற்று நடிக்­கும் படங்­களும் கதா­பாத்­தி­ரங்­க­ளுமே போதுமா­னவை," என்­கி­றார் ராஷ்­மிகா மந்தனா.

, :   

ராஷ்மிகா மந்தனா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!