புதுப்படங்கள், அறிவிப்புகள்

புதுப்படங்கள், அறிவிப்புகள்

3 mins read
4ec24dad-6015-478a-be33-954e02fa9e16
-

'மாஸ்­டர்' உள்­ளிட்ட சில படங்­க­ளின் வசூல் தமிழ்த் திரை­யு­ல­கத்­தி­ன­ருக்­குத் தெம்­ப­ளித்­துள்­ளது.

இதை­ய­டுத்து முன்­னணி கதா­நா­ய­கர்­கள் இப்­போது நடித்து வரும் படங்­கள் தொடர்­பான பணி­களை வேகப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

"மேலும் தாங்­கள் நடிக்­கும் புதுப்­ப­டங்­கள் குறித்து அண்­மை­யத் தக­வல்­க­ளை­யும் அடுத்­த­டுத்து வெளி­யிட்டு வரு­கின்­ற­னர்.

"இத­னால் தங்­கள் படம் குறித்த எதிர்­பார்ப்­பும் ரசி­கர்­கள் மத்­தி­யில் குறைந்­து­வி­டா­மல் பார்த்­துக்­கொள்­கின்­ற­னர். சற்றே தாம­த­மாக வெளி­யீடு கண்ட படத்­தின் வசூல் குறை­யா­மல் இருக்க இந்த நட­வ­டிக்­கை­கள் உத­வும்," என்­கின்­ற­னர் கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள்.

நடி­கர் அருண் விஜய் நடிக்­கும் 31வது பட­மான 'ஏவி 31'ன் முதல் தோற்ற சுவ­ரொட்டி இன்று வெளி­யீடு காண்­கிறது. தற்­கா­லி­க­மாக 'ஏவி 31' என்று குறிப்­பி­டப்­படும் இப்­ப­டத்­தின் தலைப்­பை­யும் இன்று அறி­விக்க உள்­ள­ன­ராம்.

இப்­படத்­தில் ரெஜினா, உட்­பட இரண்டு நாய­கி­கள் உள்­ள­னர். அறி­வ­ழ­கன் இயக்­கத்­தில் திகி­லும் மர்­மங்­களும் நிறைந்த பட­மாக உரு­வா­கிறது. அறி­வ­ழ­கன் ஏற்­கெ­னவே அருண் விஜய்யை வைத்து 'குற்­றம் 23' படத்தை இயக்­கி­ய­வர்.

வசூல் ரீதி­யில் வெற்றி பெற்ற அந்­தப் படத்தை அடுத்து மீண்­டும் அரு­ணுக்கு ஏற்ற கதை­யு­டன் அவர் கள­மி­றங்கி உள்­ளார். இதற்­கி­டையே இரண்டு முன்­னணி இயக்­கு­நர்­க­ளின் படங்­க­ளி­லும் அருண் விஜய் ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

*** 'வலிமை' படம் குறித்த அண்­மை­யத் தக­வல்­க­ளைச் சரி­வர வெளி­யி­டு­வ­தில்லை என்று அஜித் ரசி­கர்­கள் தரப்­பில் தொடர்ந்து புகார்­கள் எழுப்­பப்­பட்டு வந்­தன. இந்­நி­லை­யில் அண்மையில் வெளி­யான தக­வல் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்தியுள்­ளது.

இப்­ப­டத்­தில் இடம்­பெ­றும் ஒரு துரத்­தல் காட்­சிக்­காக பெரிய பேருந்து ஒன்றை அஜித் ஓட்­டிச்­சென்­றா­ராம். படத்­தின் முக்­கி­ய­மான கட்­டத்­தில் இடம்­பெ­றும் இந்த சண்­டைக்­காட்­சி­யில் நடிப்­பது ஆபத்து நிறைந்­தது என்று இயக்­கு­நர் எச். வினோத், அவ­ரி­டம் தெரி­வித்­துள்­ளார். ஆனால் அஜித்தோ 'டூப்' கலை­ஞர் தேவை­யில்லை என்­றும் தானே நடிப்­ப­தா­க­வும் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­விட்­டா­ராம்.

"'வலிமை' படத்­தின் மிக அதி­ர­டி­யான காட்­சி­யாக இந்த துரத்­தல் காட்சி இருக்­கும். ரசி­கர்­கள் திரை­ய­ரங்­கில் கொண்­டாடி மகிழ்­வார்­கள்," என்று படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

*** 'அண்­ணாத்த' படம் மீண்­டும் வேக­மாக வளர்ந்து வரு­கிறது. இதற்­காக ஹைத­ரா­பாத்­துக்கு தனி விமா­னத்­தில் பறந்து சென்­றார் ரஜினி.

படப்­பி­டிப்­பின்­போது ரஜி­னி­யும் இயக்­கு­நர் சிவா­வும் பேசிக்­கொண்­டி­ருக்­கும் காட்­சி­யு­டன் கூடிய புகைப்­ப­டம் ஒன்­றைத் தயா­ரிப்­புத் தரப்பு வெளி­யிட்­டுள்­ளது. ரஜி­னி­காந்த் அதில் வேட்டி சட்­டை­யில் இள­மைத் தோற்­றத்­தில் காணப்­ப­டு­கி­றார்.

இந்­தப் புகைப்­ப­டத்­தைக் கண்டு ரசி­கர்­கள் உற்­சா­க­ம­டைந்­த­து­டன் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­கின்­ற­னர். கிரா­மத்­துப் பின்­ன­ணி­யில் உரு­வாகி வரும் 'அண்­ணாத்த' இந்­தாண்டு தீபா­வ­ளிப் பண்­டி­கை­யின்­போது திரை காண்­கிறது.

ஹைத­ரா­பாத் படப்­பி­டிப்­பில் ரஜி­னி­யு­டன் சூரி­யும் பங்­கேற்­றுள்­ளார். ரஜி­னி­யு­டன் இணைந்து நடிப்­பது இது­தான் முதல் முறை என்­ப­தால் ரசி­கர்­க­ளைப் போலவே சூரி­யும் உற்­சா­கத்­தில் உள்­ளார்.

"தலை­வர் படப்­பி­டிப்­புத் தளத்­தில் கலக்­கு­கி­றார். இது வேறு லெவல் எனர்ஜி. அவ­ரு­டன் நடிப்­ப­தில் மகிழ்ச்சி," என்று அண்­மைய பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார் சூரி.

*** 'கர்­ணன்' படம் வெளி­யான மூன்று நாள்­களில் 23 கோடி ரூபாய் வசூல் செய்­துள்­ள­தாம். தனுஷ் நடித்து வெளி­யான படங்­களில் தமி­ழ­கத்­தில் அதிக வசூல் கண்ட திரைப்­ப­டம் இது­தான்.

இந்­தி­யில் 'அந்த்­ராங்­கிரே' படத்தை முடித்­துள்­ளார் தனுஷ். மேலும் 'தி கிரே மேன்' என்ற ஹாலி­வுட் படத்­தில் நடிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா சென்­றுள்­ளார். இதை­ய­டுத்து நான்கு புதிய படங்­களில் நடிக்­கி­றார். கார்த்­திக் நரேன் இயக்­கத்­தில் தனு­ஷின் 43வது படம் உரு­வா­கிறது. அதன் பின்­னர் தன் அண்­ணன் செல்­வ­ரா­க­வ­னின் 'நானே வரு­வேன்' படத்­தி­லும் ராம்­கு­மார், அருண் மாதேஸ்­வ­ரன் படங்­க­ளி­லும் நடிக்­கி­றார்.