‘இருவரும் குரு என்று அழைத்துக்கொள்வோம்’

தாம் பிர­ப­ல­ம­டைய கார­ண­மாக இருந்த சில படங்­களில் நடிக்­கும் வாய்ப்பை சிவ­கார்த்­தி­கே­யன்­தான் பெற்­றுக் கொடுத்­த­தா­கச் சொல்­கி­றார் யோகி­பாபு.

'மான் கராத்தே' படத்­தில் நடித்­த­போ­து­தான் சிவா­வு­டன் தொடர்பு ஏற்­பட்­ட­தாம். அதன்­பி­றகு இரு­வரும் நெருங்­கிய நண்­பர்­க­ளா­கி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"உண்­மை­யில் 'மான் கராத்தே' படத்­தில் நான் ஒரு காட்­சி­யில்­தான் வரு­வேன். அதைப் பட­மாக்கி முடித்த பிறகு சிவ­கார்த்­தி­கே­யன் பார்த்­துள்­ளார். அவர் பாராட்­டி­ய­தைக் கண்டு எனக்கு மேலும் சில காட்­சி­கள் கொடுத்­த­னர்.

"அதே­போல் 'ரெமோ', 'காக்­கிச் சட்டை' படங்­க­ளுக்­கும் என்னை சிபா­ரிசு செய்­தது சிவா சார்­தான். 'கோல­மாவு கோகிலா'வில் எனது கதா­பாத்­தி­ரம் பல­ரால் பாராட்­டப்­பட்டு பெரிய அள­வில் பெயர் வாங்­கிக் கொடுத்­தது. அது­வும்­கூட சிவா மூலம்­தான் சாத்­தி­ய­மா­னது. இயக்­கு­நர் நெல்­ச­னி­டம் என்னை அவர்­தான் அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­தார். இரு­வ­ரும் குரு என்­று­தான் அழைத்­துக் கொள்­வோம்," என்­கி­றார் யோகி பாபு.

இவர் நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான 'மண்­டேலா' படம் விமர்­ச­கர்­க­ளின் பாராட்­டு­களை மொத்­த­மாக அள்­ளி­யி­ருக்­கிறது. தேடி­வ­ரும் பாராட்­டு­க­ளுக்கு எல்­லாம் இயக்­கு­நர் அஸ்­வின்­தான் கார­ணம் என்­கி­றார் யோகி.

"நகைச்­சுவை மட்­டுமே எனக்­குத் தெரி­யும். ஒரு­வர் பேசும் வச­னத்­துக்கு எதி­ராக சுருக்­க­மா­கப் பேசி கல­க­லப்­பூட்­டு­வது மட்­டுமே எனக்­குத் தெரி­யும். நானும்­கூட இப்­ப­டி­யொரு படத்­தில் நடிக்க முடி­யும் என்று நம்­பிக்­கை­யூட்டி நடிக்க வைத்­தது அஸ்­வின்­தான்.

"அவர் என்­னைச் சந்­தித்­த­போது முதன்­மைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­க­வேண்­டும் என்­றார். 'அது எல்­லாம் வேலைக்கு ஆகாது. என்­னை­யெல்­லாம் நாய­க­னா­கப் பார்க்க மாட்­டார்­கள்' என்­றேன். 'கதை­யைக் கேட்ட பிறகு முடிவு செய்­யுங்­கள்' என்று அஸ்­வின் கூறி­னார்.

"அவர் சொன்ன முதல் காட்­சியே எனக்கு ரொம்­பப் பிடித்­தி­ருந்­தது. முழுக்­க­தை­யை­யும் கேட்­ட­பி­றகு நடிப்­ப­தாக ஒப்­புக்­கொண்­டேன்.

"இதற்­கு­முன்பு 'ஆண்­ட­வன் கட்டளை', 'பரி­யே­றும் பெரு­மாள்' உள்ளிட்ட படங்­களில் 10 நிமி­டங்­கள் போல் உணர்­வு­பூர்­வ­மாக நடித்­தி­ருப்­பேன். ஆனால் படம் முழுக்க என்னை அவ்­வாறு நடிக்க வைத்­தது கொஞ்­சம் ஆபத்­தான செயல்­தான். படப்­பி­டிப்­பின்­போது என் இஷ்­டத்­துக்கு சில வச­னங்­க­ளைப் பேசு­வேன்.

"அப்­போ­தெல்­லாம் இது உணர்வு­பூர்­வ­மான காட்சி, இங்கு நகைச்­சுவை தூக்­க­லாக இருக்­க­வேண்­டும் என்­றெல்­லாம் சொல்லி வேலை வாங்­கி­யது அஸ்­வின்­தான். கதை­யு­டன் பய­ணிக்­கத் தொடங்­கி­ய­தும் அது சொல்­ல­வ­ரும் வலி­யைப் புரிந்து­கொண்டு நடித்­தேன்," என்கிறார் யோகிபாபு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!