காக்கி சட்டைக்கு பின்னால் இருக்கும் கதைகளை விவரிக்க வருகிறார் ‘ரைட்டர்’

இயக்­கு­நர் பா. ரஞ்­சித்­தின் சீடர்­களில் ஒரு­வ­ரான ஃபிராங்க்­ளின் ஜேக்­கப் இயக்­கத்­தில் உரு­வாகி வரு­கிறது 'ரைட்­டர்'. இது காவல்­து­றையை மைய­மாக வைத்து உரு­வா­கும் படம்.

காக்­கிச்­சட்­டைக்­குப் பின்­னால் இருக்­கும் கதையை விவ­ரிக்­கும் இந்­தப் படம் அனை­வ­ருக்­கும் ஏற்­ற­தாக இருக்­கும் என்று சொல்­லும் அறி­முக இயக்­கு­நர், இந்­தச் சமூ­கத்­தில் காவல்­து­றை­யின் பங்கு என்ன என்­பது குறித்து பாதிக்­கப்­பட்ட அல்­லது அத்­து­றை­யில் உழல்­கி­ற­வர்­களை வைத்தே விவ­ரித்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"ஒரு­வன் நல்­ல­வனா, கெட்­ட­வனா என்­ப­தைக்­கூட இங்கே சூழல்­தான் தீர்­மா­னிக்­கிறது. காவல்­து­றை­யின் சமூக வன்­மு­றை­யின் அத்­தனை சாத்­தி­யங்­க­ளை­யும் போலி என்­க­வுன்­டர்­களை நடத்­தும் காவல்­து­றை­யின் பிரச்­சி­னை­க­ளை­யும் பேசி­யி­ருக்­கி­றேன்.

"உண்­மை­யை­யும் அசல் வாழ்க்­கை­யை­யும் காட்­சி­களில் விவ­ரிக்­கும் படம் இது. இதைப் பார்த்து யாரும் வன்­மு­றையை பழக்­கிக்­கொள்ள முடி­யாது.

"ஆனால் அதன் உண்­மைத்­தன்மை இப்­ப­டத்­தில் வெளி­வந்­தி­ருக்­கிறது," என்­கி­றார் இயக்­கு­நர் ஃபிராங்க்­ளின் ஜேக்­கப்.

காவல்­துறை அமைப்பு குறித்து இந்­தப் படம் சில கேள்­வி­களை எழுப்­பு­மாம். அத்­து­றை­யில் உள்ள சில கோளா­று­க­ளை­யும் வெளிப்­படுத்­து­மாம்.

படம் பார்க்­கும் ரசி­கர்­கள் அதில் சொல்­லப்­பட்ட உண்­மை­களை உணர்ந்­தாலே போதும் என்று குறிப்­பி­டு­ப­வர், இந்த உணர்­தலே தனக்­குக் கிடைத்த வெற்­றி­யாக இருக்­கும் என்­கி­றார்.

படத்­தின் முதன்­மைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க சமுத்­தி­ர­க­னியை பா. ரஞ்­சித்­தான் தேர்வு செய்­தா­ராம். 'எப்­ப­டிப் பார்த்­தா­லும் அவரை விட்­டால் 'ரைட்­டர்' கதா­பாத்­தி­ரத்­துக்கு வேறு ஒரு­வரை கற்­பனை செய்­யக்­கூட முடி­ய­வில்லை' என்­கி­றார்.

சமுத்­தி­ர­க­னி­யி­டம் நேரில் கதை சொல்­லச் சென்­ற­போது இவர் கைப்­பட எழுதி வைத்­தி­ருந்த கதைப் புத்­த­கத்தை கேட்டு வாங்கிப் படித்துவிட்டு இரண்டே மணி நேரத்­தில் மீண்­டும் அழைத்­துள்­ளார். "இந்த 'ரைட்­டர்' கதா­பாத்­தி­ரம் எனக்­கு­த்தான்," என்­றும் உறுதி செய்­துள்­ளார்.

"அன்று என் தோளில் போட்ட கையை இன்­று­வரை அவர் எடுக்­கவே இல்லை. 34 நாள்­களில் படத்தை முழு­மை­யாக பட­மாக்க அவரே கார­ண­மாக இருந்­தார்.

"சினிமா மூலம் சமூக மாற்­றங்­களைச் சாதிக்க முடி­யும் என நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன். அதே­ச­ம­யம் கருத்­து­களை நேர்­மை­யா­கப் பதிவு செய்­ய­வேண்­டும் என்­ப­தும் என் கொள்கை.

"பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைப் பற்­றிச் சொல்­லும்­போது கொஞ்­சம் தீவி­ரம் இருக்­கத்­தான் செய்­யும். கொஞ்­சம் ரத்­தம் கசி­யத்­தான் செய்­யும். காவல்­துறை பணி மிக முக்­கி­ய­மா­னது.

"குற்­ற­வி­யல் சட்­டத்­தின் அத்­த­னைப் பிரி­வு­க­ளை­யும் போலி­சா­ரும் நீதி­ப­தி­க­ளும்­தான் விரல் நுனி­யில் வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

"சில வழக்­கு­கள் தொடர்­பான விவ­ரங்­க­ளைப் படித்­துப் பார்த்­தேன். எந்த ஒரு வழக்­கை­யும் சித்­தி­ரிப்­பதில் காவல்­து­றை­யில் எழுத்­த­ராக பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்­குத்­தான் முக்­கி­யப் பங்கு உள்­ளது.

"ஒரு ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தைப் படித்­துப் பார்த்­தால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் அப்­ப­டிச் சொன்­னார்­கள் என்றோ, சொல்­ல­வில்லை என்றோ கணிக்கமுடி­யாது. வழக்கு நுட்­பங்­க­ளைக் கண்டு மிரண்டு போனேன். அப்­ப­டிப்­பட்ட 'ரைட்­டர்' கதா­பாத்­தி­ரத்­துக்­காக கனி சார் கடு­மை­யாக உழைத்­துள்­ளார்.

"58 வயதை ஒட்­டிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்ள கனி சாருக்கு கதைப்­படி இரு மனை­வி­கள். முதல் மனை­விக்­குக் குழந்தை இல்­லா­மல் இன்­னொரு பெண்­ணைத் திரு­ம­ணம் செய்­வார்.

"வாழ்­வி­யல் சார்ந்த போலிஸ்­கா­ர­ரின் அவ­தி­க­ளை­யும் பாடு­க­ளை­யும் படத்­தில் வகைப்­ப­டுத்தி உள்­ளேன். வாழ்க்­கையை பிர­தி­ப­லித்­தால்­தான் இனி சினிமா பேசப்­படும் என நினைக்­கி­றேன்," என்­கி­றார் ஃபிராங்க்­ளின் ஜேக்­கப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!