40 வயது தாயாக காயத்ரி

'மாம­னி­தன்' படத்­தின் வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­நோக்­கிக் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் காயத்ரி.

இதில் 40 வயது தாயாக நடித்­துள்­ளா­ராம். இதற்­காக தனது உடல் எடையை 15 கிலோ வரை அதி­க­ரித்து பின்­னர் உடல் இளைத்­துள்­ளார்.

சீனு ராம­சாமி இயக்­கத்­தில் உ,ருவா­கிறது 'மாம­னி­தன்'. விஜய் சேது­ப­தி­யும் காயத்­ரி­யும் இணைந்து நடிக்­கின்­ற­னர். கதைக்­காக தன் உடற்­கட்டை மாற்­றி­ய­மைக்க மிக­வும் மெனக்­கெட்­ட­தாக சொல்­கி­றார் காயத்ரி.

"எனது கதா­பாத்­தி­ரம் 20 ஆண்டு காலத்தைக் கடந்து செல்­வ­து­போல் பதி­வாகி உள்­ளது. கதை­யின் ஓட்­டத்­துக்­கேற்ப எனது கதா­பாத்­தி­ரம் மட்­டு­மல்­லா­மல் எனது தோற்­ற­மும் மாறிக்­கொண்டே இருக்­கும்.

"40 வயது தாயாக நடிக்க என்­னைத் தேர்வு செய்­வ­தற்கு முன்பு ஒப்­பனை சோதனை நடை­பெற்­றது. பல­வி­த­மாக முயன்­றும் எனது தோற்­றம் இயல்­பா­ன­தாக அமை­ய­வில்லை.

"இத­னால் சற்று உடல் பெருக்க வேண்­டும் என்று இயக்­கு­நர் கூறி­விட்­டார். அத­னால் உடல் எடையை அதி­க­ரித்­தேன்," என்­கி­றார் காயத்ரி.

சுமார் இரண்டு மாதங்­க­ளுக்­குள் கண்­ணில் பட்­டதை எல்­லாம் சாப்­பிட்டு 15 கிலோ வரை எடையை அதி­க­ரித்­த­தாக சொல்­லிச் சிரிப்­ப­வர், தமது இள­மைக்­கா­லம் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­களை இயக்­கு­நர் முத­லில் பட­மாக்­கி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"இத­னால் உடல் எடையை அதி­க­ரிக்க நான் அவ­ச­ரப்­ப­ட­வில்லை. அந்­தப் பட­லம் நிதா­னப் போக்­கில் நிகழ்ந்­தது. படப்­பி­டிப்பு துவங்­கு­வ­தற்கு முன்பு சிறப்பு யோகா வகுப்­புக்­குச் சென்­றேன். மிகக் கடு­மை­யான உண­வுக் கட்­டுப்­பாட்­டை­யும் பின்­பற்­றி­னேன். அதன்­பின்­னர் எதிர்த்­தி­சை­யில் பய­ணிக்க வேண்டி இருந்­தது. அதா­வது உடல் எடையை அதி­க­ரிக்க வேண்­டும்.

"இதற்­காக எனக்­குப் பிடித்­த­மான குலாப் ஜாமூன், பர்ஃபி, சாக்­லேட்­டு­களை இஷ்­டப்­படி சாப்­பிட்­டேன். தொலை­பேசி வழி 'ஆர்­டர்' செய்­தால் வீடு தேடி வந்து நாம் கேட்ட உண­வைக் கொடுக்­கும் சேவையை தினந்­தோ­றும் பயன்­படுத்­திக்கொண்­டேன்.

"பீட்சா, பாஸ்தா போன்ற அயிட்­டங்­களை வாய்ப்பு கிடைத்த போதெல்­லாம் உண்டு மகிழ்ந்­தேன். படப்­பி­டிப்­புக்­காக பண்­ணை­பு­ரம், ஆலப்­புழா ஆகிய இடங்­க­ளுக்­குச் சென்­ற­போது உள்­ளூர் உணவை ருசித்­தேன். இறு­தி­யில் இயக்­கு­நர் எதிர்­பார்த்த அள­வுக்கு என் உடல் எடை கூடி­யது. அவர் எதிர்­பார்த்த அளவு பெருத்­து­விட்­டேன்.

"அதன் பிற­கு­தான் 40 வயது தாயு­டன் தொடர்­பு­டைய காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­டன. அவை திருப்­தி­க­ர­மாக வந்­தி­ருப்­ப­தாக இயக்­கு­நர் கூறிய பிற­கு­தான் நிம்­மதி அடைந்­தேன்," என்­கி­றார் காயத்ரி.

ஆனால் இதன் பிற­கு­தான் சிக்­கல் தொடங்­கி­ய­தாம். உட­லில் திடீ­ரென ஏற்­பட்ட மாற்­றம் கார­ண­மாக காயத்­ரி­யின் உடல் எடை தொடர்ந்து அதி­க­ரித்­த­ப­டியே இருந்­த­தாம். எனவே, கூடு­த­லாக உடற்­ப­யிற்சி, யோகா பயிற்­சி­களை மேற்­கொண்டு நிலை­மை­யைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­த­தா­கச் சொல்­கி­றார்.

"இறு­திக்­கட்டப் படப்­பி­டிப்­புக்­காக வார­ணா­சிக்­குச் சென்­றி­ருந்­தோம். அங்கு வாழ்க்­கை­யின் புதிய தத்­து­வத்தை உண­ர­மு­டிந்­தது. கங்கை நதி­யின் ஒரு­பக்­கம் வழி­பா­டு­கள் நடந்துகொண்­டி­ருந்­தன. மற்­றொரு பக்­கம் இறு­திச் சடங்­கு­கள் நடந்­தன. ஆனால் எல்­லோ­ருமே பாவ விமோ­ச­னம் பெறு­வ­தையே நோக்­க­மாக கொண்­டி­ருந்­த­னர்.

"ஒரு குறிப்­பிட்ட காட்­சி­யில் எனது பாவங்­க­ளைக் கரைக்க கங்கை நதி­யில் முங்கி எழு­வது போன்று நடித்­தேன். அங்­கி­ருந்த சூழ்­நி­லையா அல்­லது காட்சி பட­மாக்­கப்­பட்ட விதமா என்று தெரி­ய­வில்லை, அவ்­வாறு முங்கி எழுந்­த­போது என்­னில் ஒரு பகுதி உண்­மை­யா­கவே பாவ விமோ­ச­னம் பெற்­ற­தா­கத் தோன்­றி­யது," என்­கி­றார் காயத்ரி.

விஜய் சேது­ப­தி­யு­டன் நடிப்­பது சவா­லான அனு­ப­வம் என்று குறிப்­பி­டு­ப­வர், அவ­ரி­டம் இருந்து நிறைய கற்­றுக்­கொள்ள முடி­யும் என்­கி­றார்.

"அது மட்­டு­மல்ல. இயக்­கு­நர் சீனு ராம­சாமி இத்­த­கைய தர­மான படங்­களைத் தந்­துள்­ளார் என்­ப­தும் அனை­வ­ருக்­கும் தெரி­யும். அவ­ரது இயக்­கத்­தில் நடிக்­கும் வாய்ப்பு கிடைப்­பது எனது அதிர்ஷ்­டம்," என்­கி­றார் காயத்ரி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!